தோழர்.பொன்னுச்சாமி நினைவுதினம்
17 Jan 2026, 2:42 pm
<p><strong>தோழர்.பொன்னுச்சாமி நினைவுதினம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.17- தோழர் கே.பொன்னுச் சாமியின் 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் சனி யன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் தொழிற்சங்க தலைவர்களில் ஒருவராகவும், திருப்பூர் நகர் மன்றத்தின் துணைத் தலைவ ராகவும், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பின ராகவும் இருந்து செயலாற்றி வந்த அருமைத் தோழர் கே.பொன்னுச்சாமியின் 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி தியாகி பழ னிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. வடக்கு மாநகரச் செயலாளர் சௌந்தரரா ஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துகண்ணன், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி ஆகியோர் நினைவுரை யாற்றினர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் டி.ஜெயபால், ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், ஆர்.மைதிலி, கே.கணேசன், பி.லட்சுமி, க. நிருபன் சக்கரவர்த்தி மற்றும் எம்.ராஜகோ பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
