தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வர்க்க உணர்வோடு செயல்பட்டவர் தோழர் பால்சாமி நினைவேந்தல் கூட்டத்தில் அ.சவுந்தரராசன் புகழாரம்

29 Jun 2026, 12:07 am
வர்க்க உணர்வோடு செயல்பட்டவர் தோழர் பால்சாமி  நினைவேந்தல் கூட்டத்தில் அ.சவுந்தரராசன் புகழாரம்
<p><strong>வர்க்க உணர்வோடு செயல்பட்டவர் தோழர் பால்சாமி நினைவேந்தல் கூட்டத்தில் அ.சவுந்தரராசன் புகழாரம்</strong></p><p>சென்னை, ஜூன் 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர், சிஐடியு அம்பத் தூர் பகுதி செயலாளர் தோழர் சு.பால்சாமி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 27) அம்பத்தூரில் தலை வர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் அவரது படத்தை திறந்து வைத்து பேசுகையில், தோழர் பால்சாமி எச்.வி.எப்-இல் பணிக்கு சேர்ந்த பிறகு அங்கு சிஐடியு அணியை ஒரு வலு வான அணியாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். மத்திய அரசு ஊதியம் பெறக்கூடிய பாதுகாப்புத் துறையில் இருப்பவர்கள் அரசியலில் ஈடு படக்கூடாது. ஈடுபட்டால் வேலையே போய் விடும் என்ற நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பழைய வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் தோழர் வி.பி.சிந்தன் போட்டியிடும் போது, நமக்கு கட்சி கிளையோ பிற அமைப்புகளோ இல்லாத ஆவடியை தாண்டி இருக்கும் பகுதிகளில், கிராமப்பு றங்களில் தொடர்ச்சியாக இருந்து அங்கேயே மற்றவர்களோடு பழகி, கட்சி கொடுத்த பணியை ஆவடி தோழர்கள் மிகச் சிறப்பாக மேற்கொண்டனர். அதில் தோழர் பால் சாமிக்கு முக்கிய பங்கு உண்டு. பின்னர் அந்த பகுதிகளில் கிடைத்த தொடர்புகளை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து அந்த கிராமப்புறங்களுக்கு சென்று வந்தார். அம்பத்தூர் பகுதியில் உள்ள எல்லா அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஆர்ப் பாட்டங்களை முன்னெடுப்பார். ஒரு தலைமை குணத்தோடு, நிர்வாகங்களோடு பேச்சுவார்த்தை நடத்தும் குணத்தோடு, அரசு அதிகாரிகளோடு, காவல் துறையின ரோடு, தொழிலாளர் துறையோடு தொழிலா ளர்கள் பிரச்சனையை எடுத்து பேசும் பக்குவத்தோடும், திறமையோடும் தோழர் பால்சாமியின் செயல்பாடு இருந்தத என்று புகழாரம் சூட்டினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் வி.குப்புசாமி, பொருளாளர் மா.பூபாலன், நிர்வாகிகள் எல்.பி.சரவணத்தமிழன், எம்.ராபர்ட்ராஜ், இரா.கோபி, பி.முரளி கிருஷ்ணன், சத்திய நாரயணன் (எச்விஎப்), பி.மாரியப்பன் (ஏஐடியுசி), கோவி.முனுசாமி (ஏஐசிசிடியு), தாமோதரன் (எம்.எல்.எப்), கொக்க கோலா சிட்டிக்ஸ் நிறுவன மனிதவள மேலாளர் கோபி, எ.ராயப்பன் (மோட்டர் வாகனம்) ஆகி யோரும் பேசினர். முன்னதாக குடும்ப நிதி 1 லட்சம் ரூபாயை அ.சவுந்தரராசன் வழங்க அவரது மனைவி பழனியம்மாள், மகன் அமுதன், மகள் அஜிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.கனேஷ் ராவ் (மின் ஊழியர் மத்திய அமைப்பு), டி.கே.சம்பத் ராவ் (தையல் சங்கம்), ஏ.செல்வராஜ், ஜி.மூர்த்தி (ஆட்டோ சங்கம்), கே.சீனிவாசன் (கட்டு மான சங்கம்), எஸ்.வேலு (அமைப்புசாரா), ஜி.மணி (போக்குவரத்து), பி.மகாலட்சுமி (மாதர் சங்கம்), வி.ஜானகிராமன், எம்.ராஜ் குமார் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.