தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியாக போராடியவர் தோழர் பால்சாமி! இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

8 Jun 2026, 1:22 am
சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியாக போராடியவர் தோழர் பால்சாமி!  இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்
<p><strong>சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியாக போராடியவர் தோழர் பால்சாமி! இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்</strong></p><p>அம்பத்தூர், ஜூன் 7- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பின ரும் சிஐடியு அம்பத்தூர் பகுதி தலைவருமான தோழர் சு.பால்சாமி (74) சனிக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், துணைப் பொதுச் செயலாளர் திருச் செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ் ணன், மாநிலக்குழு உறுப்பி னர் எல்.சுந்தரராஜன், செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. மகேந்திரன், டி.கே.சண்மு கம், எல்.பி.சரவணத்தமி ழன், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஷ்குமார், ஆர்.லோக நாதன், இரா.முரளி, சி.திரு வேட்டை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ் வரி, ஆர்.கோபி, பா.ஹேமா வதி, எஸ்.பவானி, எம்.ராஜ் குமார், அகில இந்திய பாது காப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, மாவட்டப் பொருளாளர் மா.பூபாலன், ஏ.ராயப்பன், திமுகவைச் சேர்ந்த ஜான், மதிமுகவைச் சேர்ந்த அந்திரிதாஸ், சிபிஐ-யைச் சேர்ந்த ஏ.எஸ்.கண்ணன், தந்தை பெரியார் திராவி டர் கழகத்தின் நாகராஜன், குடியிருப்போர் நலச் சங்கத்தின் விஸ்வாம்பரம், தமிழர் விடுதலைக் கழகத் தின் சுந்தரமூர்த்தி, விசிக வைச் சேர்ந்த இப்ராஹிம், போக்குவரத்தைச் சேர்ந்த மணி, பகுத்தறிவாளர் கழகத் தின் ஜானகிராமன், சங்க பொருளாளர் முரளி, கே.ஆர்.முத்துசாமி, சிட்டி பாபு, எஸ்.எஸ்.சுப்பிரமணி யன், சிஐடியு-வைச் சேர்ந்த சுந்தரம், டிஆர்இயூ துணைத்தலைவர் ஆர்.இளங்கோவன், சிபிஎம் நிர்வாகிகள் ஆர்.ராஜன், க.உதயா, ஆனந்த், மகாலட்சுமி, வே.கிருஷ்ண சாமி, இ.பாக்கியம், கே.சீனி வாசன் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஞாயிறன்று எஸ்.கே.மகேந் திரன் தலைமையில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் பேசுகையில், திண்டுக்கல்லில் மாணவர் பருவத்தில் இருந்தே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய பால்சாமி, ஆவடி எச்விஎப் பகுதியில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியை வலுப்படுத்தி விவசாய அமைப்புகளை உருவாக்கினார் என்று குறிப்பிட்டனர். எச்விஎப் தொழிற்சங்கப் பொறுப்பாள ராக இருமுறை தேர்வு செய்யப்பட்டு நிர்வாகத் திற்கு எதிராகப் போராடிய வர், விருப்ப ஓய்வுக்குப் பின் சிஐடியு முழுநேர ஊழி யராக மாறி ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்தார் என்றும், 2008-ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட சென்னை முதல் தலைவரா கத் தேர்வாகி, ஆணவக் கொலைகளுக்கு எதிரான திருச்செங்கோடு நடை பயணத்தில் 15 நாட்களும் சோர்வின்றிப் பங்கேற்றார் என்றும் புகழாரம் சூட்டினர். எளிமை, துணிச்சல், நேர மேலாண்மை கொண்ட சமரசமற்ற போராளியான பால்சாமியின் வழியில் அவரது மனைவி பழனி யம்மாள், மகன் அமுதன், மகள் அஜிதா ஆகியோரும் மக்கள் இயக்கங்களில் செயலாற்றி வருவது குறிப் பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.