இறப்புக்கு முன் பகுத்தறிவு சாசனம் எழுதிய தோழர் பழனிவேல் உடல் மருத்துவக் கல்விக்காக தானம்
1 Jun 2026, 10:26 pm

இறப்புக்கு முன் பகுத்தறிவு சாசனம் எழுதிய தோழர் பழனிவேல் உடல் மருத்துவக் கல்விக்காக தானம்

மதுரை, ஜூன் 1- பகுத்தறிவு மற்றும் மனிதநேயக் கொள் கைகளில் உறுதியாக செயல்பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் பழனிவேல் (68), தனது மறைவுக்குப் பின் னர் உடலை மருத்து வக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக தானம் செய்ய வேண் டும் என்ற விருப் பத்தை நிறைவேற் றும் வகையில், அவ ரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு ஒப்படைக்கப்பட்டது.

மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழனி வேலுக்கு சனிக்கிழமை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். அறுவை சிகிச்சைக்கு முன்பு அவர் எழுதியிருந்த விருப்பக் கடிதத்தில், தனது மறைவுக்குப் பின்னர் எந்தவித மதச் சடங்கு களோ, மூடநம்பிக்கை சார்ந்த நிகழ்வு களோ நடத்தப்படக்கூடாது என்றும், உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செங்கொடி போர்த்தி மரியாதை செலுத்துவதோடு, இரத்த தானம், உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் குறித்த விழிப்பு ணர்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அவரது விருப்பங்களை நிறைவேற் றும் பொறுப்பை சிபிஎம் போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் எஸ்.அழகர் சாமி, சிஐடியு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகளான ஆர்.வாசுதேவன், எல்.அழகர், தமுஎகச மாவட்டச் செயலாளர் பூ.பாண்டிய முத்துக் குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம். கலைச்செல்வன், சிஐடியு எ.மலை ஒன்றி யச் செயலாளர் ஆர்.மணிகரன் மற்றும் தனது சகோதரர் ஆர்.சாந்தமூர்த்தி ஆகியோ ரிடம் ஒப்படைத்திருப்பதாக குறிப்பிட்டி ருந்தார். அதேபோல், இந்த விருப்பக் கடிதத்தை மேற்கண்ட தோழர்கள் முன்னிலையிலும், தோழர்கள் ஆர்.மனோகரன் மற்றும் பூ. பாண்டிய முத்துக்குமார் ஆகியோரின் சாட்சியத்துடனும் எழுதி வழங்கியதாகவும் அதில் பதிவு செய்திருந்தார்.

அவரது மறைவையடுத்து ஒத்தக்கடை அருகே உள்ள இல்லத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் பி.எம்.அழ கர்சாமி, சிஐடியு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செய லாளர் ஆர்.வாசுதேவன், தமுஎகச நிர்வாகி கள், தொழிற்சங்கத் தலைவர்கள், நண் கர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜீவானந்தம், கிழக்கு ஒன்றியச் செயலாளர் கலைச் செல்வன் மற்றும் வாலிபர் சங்க மாதர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் அவரது விருப்பத்தின்படி செங் கொடி போர்த்தப்பட்ட உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.

உடல் ஒப்படைப்பு நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநி லக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா.நரசிம்மன் வை.ஸ்டாலின், எம். பாலசுப்பிரமணியம், அ.ரமேஷ், டி. செல்வா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் க.நீதிராஜா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு ணர்வை வலியுறுத்தி வந்த தோழர் பழனி வேல், தனது மறைவிலும் உடல் தானம் மூலம் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.

மறைந்த தோழர் பழனிவேல் அவர் களுக்கு அம்பிகா என்ற மனைவி, நாடக கலைஞராக தமுஎகச மேடைகளில் அவ ருடன் இணைந்து நடித்து வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னராக செயல்பட்டு வருகிறார். மேலும் சுர்ஜித் பாரதி, சந்துரு, சுபாஷ் என மூன்று மகன்கள் உள்ளனர்.