தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் பி.செங்கோடன் படத்திறப்பு!

23 Jan 2026, 5:49 pm
தோழர் பி.செங்கோடன் படத்திறப்பு!
<p><strong>தோழர் பி.செங்கோடன் படத்திறப்பு!</strong></p> <p>நாமக்கல், ஜன.23- சிபிஎம் மூத்த தலைவரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பல்வேறு பொறுப்பு களை வகித்த மறைந்த தோழர் பி.செங் கோடன் படத்திறப்பு விழா எலச்சிபாளை யத்தில் நடைபெற்றது. ஒன்றுபட்ட சேலம் மாவட்டம், தற்போ தைய நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், காந்தி &nbsp;ஆசிரமம், நல்லிபாளையம் கிராமத்தில் விவ சாய கூலித்தொழிலாளி பழனி - பவளாயி தம்பதியினருக்கு 1942 இல் மகனாக தோழர் ப.செங்கோடன் பிறந்தார். தனது இளமைப் பருவத்திலேயே 1962 இல் மேட்டூர் கெமிக் கல்ஸ் நிறுவனம் ஏற்படுத்திய சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு நடந்த உழைப்பை சுரண்டலை எதிர்த்து சங்கம் அமைக்க முன்வந்தனர். இச்சூழலில் தான் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தோழர் &nbsp;எஸ்.பி.ராமு தலைவராகவும், தோழர் வீ.ராம சாமி செயலாளராகவும், தோழர் செங்கோ டன் உறுப்பினராகவும் இருந்து சிஐடியு சங் கம் துவக்கப்பட்டது. நிர்வாகத்தின், பழி வாங்கல் நடவடிக்கையால் செங்கோடன் வேலை இழந்தார். இதன்பின் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத் துக் கொண்டு, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று 60 ஆண்டுக் காலம் பணியாற்றினார். இதனிடையே, மக்கள் தலைவர் தோழர் பி.செங்கோடன் ஜன.7 ஆம் தேதியன்று கால மானார். இவரின் படத்திறப்பு நிகழ்ச்சி, எலச்சி பாளையம் ஒன்றியம், நல்லிபாளையத்தில் வியாழனன்று மாலை நடைபெற்றது. இந்நி கழ்விற்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினருமான பி.டில்லி பாபு, அவரது படத்தை திறந்து வைத்து புக ழஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில், கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மூத்த தோழர் ஏ.ரங்கசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், ந.வேலு சாமி, எஸ்.தமிழ்மணி, எம்.கணேசபாண்டி யன், மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வீ. தேவராஜன், வட்டக்குழு உறுப்பினர் பா. கவிதா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.