தோழர் பி.ரவிச்சந்திரனின் 5 ஆவது நினைவேந்தல்
12 May 2026, 1:11 am
<p><strong>தோழர் பி.ரவிச்சந்திரனின் 5 ஆவது நினைவேந்தல்</strong></p><p>கோவை, மே 11- தோழர் பி.ரவிச் சந்திரன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் கோவையில் பல் வேறு இடங்களில் அனு சரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுக் கரை ஒன்றியச் செயலாள ராக பணியாற்றிய தோழர் பி.ரவிச் சந்திரன் அவர்களின் 5 ஆவது ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிகப் பட்டது. வெள்ளலூர் பேரூராட்சி, மலு மிச்சம்பட்டி, மதுக்கரை ஒன்றியக்குழு, கோவை மாவட்ட சிமெண்ட் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அனு சரிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில், பி. ரவிச்சந்திரன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் மதுக்கரை ஒன்றியச் செயலாளர் எம்.பஞ்சலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டி.பாலன் இன்ஜினியர் சங்க பொதுச்செயலாளர் மாரிமுத்து, கோவை மாவட்ட சிமெண்ட் அன்ட் பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
