தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் அனுசரிப்பு
22 Sept 2026, 11:47 pm

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர், செப்.22-மறைந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் 14 ஆம்ஆண்டு நினைவுதினம் செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டமுன்னாள் செயற்குழு உறுப்பினரும், இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலப்பொருளாளருமான தோழர் பி.ராமமூர்த்தியின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூரில் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு தின நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்ஆகியோர், பி.ராமமூர்த்தியின் பணிகளையும், அவரது கம்யூனிஸ்ட் பண்புகளையும் பற்றிப் பேசினர். இந்நிகழ்வில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கு.பாலமுரளி உட்பட பலர் கலந்துகொண்டு, தோழர் ராமமூர்த்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.