மார்க்சிய-லெனினியக் கொள்கை வழியில் சமரசமின்றிப் பயணித்த வழிகாட்டி
7 Jul 2026, 10:29 pm

மார்க்சிய-லெனினியக் கொள்கை வழியில் சமரசமின்றிப் பயணித்த வழிகாட்டி

மார்க்சிய இயக்கத் தோழர் களால் “பி.ஆர்.சி” என்று நெஞ்சார அழைக்கப்படும் தோழர் பி.ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாள் இன்று.

மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளைத் தனது மூச்சாகக் கொண்டு, இறுதி வரை வர்க்கப் போராட்டக் களத்தில் சமரச மின்றி நின்ற அவரது வாழ்வும் அர்ப் பணிப்பும் தற்காலத் தோழர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சில் ஏந்த வேண்டிய புரட்சிகரப் பாடமாகும்.

கேரள மாநிலம் தலச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணில், 16ஆம் வயதே நிரம்பிய இளம் பருவத்தில் செங்கொடி இயக்கத்தின் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார் தோழர் பி.ஆர்.சி. 1942ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பிற்காகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளை விரிவுபடுத்து வதற்காகவும் அவர் சென்னை வந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தாகம் அவரை முழுமையாக ஆட்கொண்டதால், 1944ஆம் ஆண்டில் அவர் கட்சியின் முழுநேர ஊழியராக மாறி, தன்வாழ்வை இயக்கத்திற்காகவே முற்றாக அர்ப்பணித்தார்.

ஆளும் வர்க்கத்தின் ஒடுக்கு முறைகள் கம்யூனிஸ்டுகளைச் சூழ்ந்திருந்த அக்கால கட்டத்தில், கட்சியின் கொள்கை களைக் காப்பதற்காகப் பல மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையையும், கொடுமையான சிறை வாழ்க்கையையும் அவர் எதிர்கொண்டார்.

கட்சியின் உத்தரவை ஏற்று 1950ஆம் ஆண்டு திருச்சியில் தனது கட்சிப் பணியைத் தொடங்கிய அவர், அங்குள்ள தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.

ஒரு சாதாரண ஊழியராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, தனது அயராத உழைப்பாலும் தத்து வார்த்தத் தெளிவாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயரிய பொறுப்பான அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வரை உயர்ந்தவர் தோழர் பி.ஆர்.சி. மார்க்சிய சித்தாந்தக் கல்வியைத் தான் ஆழமாகக் கற்பதிலும், அதைத் தன் தோழர்களுக்குக் கற்பிப்பதிலும் அவர் காட்டிய அக்கறை அளப்பரியது.

தோழர் பி.ஆர்.சி அவர்களின் இந்த நினைவு நாளில், அவர் ஏந்தி நின்ற செங்கொடியையும், அவர் நமக்கு ஊட்டிய சித்தாந்த வீரியத்தை யும் வர்க்கப் போராட்டக் களத்தில் இன்னும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்குச் செலுத்தும் செவ்வணக்கமாகும்.

தோழர் பி.ஆர்.சி வழிகாட்டிய மார்க்சிய-லெனினியப் பாதையில் உறுதியோடு நடைபோடுவோம்!