நேர்மைக்கு சொந்தக்காரர் தோழர் நந்தகோபால்: இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழஞ்சலி
24 May 2026, 2:34 am

நேர்மைக்கு சொந்தக்காரர் தோழர் நந்தகோபால்: இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை, மே 23- நேர்மை, எளிமை, கறார் என்பதற்கு சொந்தக்காரர் தோழர் நந்தகோபால் என்று அவரது இரங்கல் கூட்டத் தில் தலைவர்கள் புகழஞ் சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர், வடசென்னை மாவட்டக் குழு அலுவலகச் செயலாளர் க.நந்தகோபால் (81) உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (மே 22) இரவு 9 மணியளவில் கால மானார். அம்பத்தூர் ஒரகடம் செங்கல்வராயன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலு க்கு, மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகர், எல்.சுந்தர ராஜன், ஆறுமுகநயினார், முன்னாள் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் பா.சுந்தர் ராஜன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.மகேந்திரன், டி.கே.சண்முகம், கே.எஸ்.கார்த்தீஷ்குமார், இரா.முரளி, சி.திருவேட்டை, ஆர். லோகநாதன், எஸ்.பாக்கிய லட்சுமி, அ.விஜயகுமார், வி.ஜானகிராமன், எல்.பி.சர வணத்தமிழன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மா.பூபா லன், ஆர்.கோபி, வி.செல்வ ராஜ், எம்.கோடீஸ்வரி, எஸ்.பவானி, வி.கமலநாதன், வீ.ஆனந்தன், எம்.ராபர்ட் ராஜ், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணி மேகலை, மாவட்டச் செயலா ளர் வி.குப்புசாமி, சசி குமார், ஏ.ஆர்.பாலாஜி (போக்குவரத்து), ஸ்ரீனிவாசலு, ஜெ.பட்டாபி (செங்கொடி சங்கம்), நிர்வாகிகள் நித்யானந்தம், இ.பாக்கியம், க.உதயா உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தலை வர்கள் பேசுகையில் அம்பத்தூர் தொழிற் பேட்டையில் கே.எல்.கே. என்ற தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்த தோழர் நந்தகோபால், அங்கே சிஐடியு சங்கம் அமைத்து, செயலாளர் பொறுப்பை ஏற்று தொழிலாளர்களின் உரிமைக்காக பாடுபட்டவர்.

பின்னர் அம்பத்தூர் இண்ட ஸ்ட்ரியல் எஸ்டேட் இன்ஜினி யரிங் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) பொருளாளராக செயல்பட்டார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிலாளர்களை திரட்டுவதில் முன்னணி பங்கு வகித்தார்.

தொழிற் சங்கம், கட்சி நடத்தும் அனைத்து இயக்கங்களிலும் பங்கேற்றவர்.

பின்னர் சிஐடியு மாவட்ட மைய ஊழியராக செயல் பட்டார். பாட்டாளிகள் அச்சக த்தின் முழு பொறுப்பையும் ஏற்று அந்த பணிகளை திறம்பட மேற்கொண்டார்.

நவீன தொழில்நுட்ப வசதி கள் வந்த பின்னணியில் அச்சகம் மூடப்பட்ட சூழலில் தோழர் நந்தகோபால் கட்சி யின் வடசென்னை மாவட் டக்குழு அலுவலக செயலா ளராக பொறுப்பேற்று மாவட் டத்தின் நிதி கையாளும் பொறுப்பையும் முழுமை யாக ஏற்று தனது இறுதி மூச்சு வரை அந்த பணி களை திறம்பட செய்தார்.

நேர்மை, எளிமை, கறார் என்பதற்கு சொந்தக்காரர் தோழர் நந்தகோபால்.

தொழிற்சங்க அனுபவம், தொழிலாளி வர்க்க அரசியல் ஞானம், கட்சி விசுவாசம் அனைத் துக்கும் முன்னுதாரணமாய் விளங்கியவர் தோழர் நந்த கோபால் என்று தலைவர் கள் புகழஞ்சலி செலுத்தி னர். தோழர் நந்தகோபால் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பால கிருஷ்ணன், உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் உள்பட பலர் தொலைபேசி வழியாக இரங்கல் தெரி வித்தனர்.