பிரியாவிடை பெற்றார் தோழர் நல்லகண்ணு! 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை; மருத்துவமனைக்கு உடல் தானம்
26 Feb 2026, 3:28 pm
<p><strong>பிரியாவிடை பெற்றார் தோழர் நல்லகண்ணு! 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை; மருத்துவமனைக்கு உடல் தானம்</strong></p>
<p>சென்னை, பிப். 26 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் - ‘தகைசால் தமிழர்’ தோழர் ஆர். நல்லகண்ணு, தோழர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரிடமிருந்தும் பிரியாவிடை பெற்றார். தோழர் ஆர். நல்லகண்ணுவின் விருப்பப்படி, அவரது உடல், மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரராகவும், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான உறுதி மிக்க போராளியாகவும், கம்யூனிஸ்டு களுக்கே உரிய எளிமையுடனும் பெரு வாழ்வு வாழ்ந்தவர் தோழர் ஆர். நல்லகண்ணு. அவர் தமது 101-ஆவது வயதில், பிப்ரவரி 25 அன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை யில் காலமானார். இதையடுத்து, தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான ‘பாலன்’ இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சிபிஐ தேசியப் பொதுச்செயலாளர் து. ராஜா, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் செங்கொடியை போர்த்தி செவ்வஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் அஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் ஆனி ராஜா, பாண்டா, தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா. முத்தரசன், மூத்த தலைவர்கள் கே. சுப்பராயன், ஜி.பழனிச்சாமி, நா. பெரியசாமி, ஏஐடியுசி மாநிலத் தலைவர்கள் டி.எம். மூர்த்தி, எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அக்கட்சி வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மூத்த தலைவர் டி.கே. ரங்க ராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், எஸ். கண்ணன், ஜி. சுகுமாறன், கே. சாமுவேல் ராஜ், என். பாண்டி, டி. ரவீந்திரன், செ.முத்துக்கண்ணன் மற்றும் நாகை மாலி எம்எல்ஏ உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சித்தலைவர்கள் திக தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வபெருந் தகை, மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், தேமுதிக தலைவர் பிரேம லதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ. சவுந்தரராசன், செயலாளர் ஆர். கருமலையான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள், கவிஞர்கள் வைர முத்து, யுகபாரதி மற்றும் ராஜூமுருகன் உள்ளிட்ட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என சாரைசாரையாக வந்து அஞ்சலி செலுத்தினர். கேரள அரசு மரியாதை கேரள அரசு சார்பில் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் விஜயகுமார் நல்லகண்ணு உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறுதி ஊர்வலம் இதனை தொடர்ந்து வியாழனன்று (பிப்.26) அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு மரியாதை செலுத்தி னார். செவ்வணக்க முழக்கங்களையும் எழுப்பினார். 24 காவலர்கள் 3 சுற்றுகளாக 72 குண்டுகளை முழக்கினர். அதனை தொடர்ந்து து. ராஜா, மு. வீரபாண்டியன், பெ. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் அணிவகுக்க தோழர் நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தி.நகரில் சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு பிரியா விடை அளித்தனர். ஆயிரக்கணக்கானோரின் முழக்கங் களுக்கு இடையே அண்ணா சாலை வழியாக சுமார் 3 மணி நேரம் பயணித்து இறுதி ஊர்வ லம் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை அடைந்தது. அங்கும் ஏராள மானோர் காத்திருந்து தோழர் ஆர். நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி னர். இதையடுத்து அவரது உடலை தலை வர்களும், அவரது குடும்பத்தினரும் கண்ணீர் மல்க, செவ்வணக்க முழக்கத்து டன் கல்லூரிக்கு தானமாக வழங்கினர். அப்போது சிபிஐ பொதுச்செயலாளர் து. ராஜா, மாநில செயலாளர் மு. வீரபாண்டி யன், சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், கே.சாமுவேல் ராஜ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தோழமை கட்சித்தலைவர்கள் உடனிருந்தனர்.</p>
