தோழர் நாகநாதன் முதலாம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம்
11 May 2026, 11:40 pm

தோழர் நாகநாதன் முதலாம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம்

இராமநாதபுரம், மே 11- இராமநாதபுரம் மாவட் டம் திருவாடானை அருகே கொட்டகுடியில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் நாக நாதன் அவர்களின் முதலாம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் திருவாடானையில் நடை பெற்றது.

தோழர் நாகநாதன், இந்தி யாவின் பிரபல மேஜிக் கலை ஞர்களில் ஒருவரான ராஜன் தலைமையிலான குழுவில் பயிற்சி பெற்று தனியாக மேஜிக் நிகழ்ச்சிகள் நடத் தும் அளவிற்கு திறமையை வளர்த்தவர்.

பின்னர் 1973 ஆம் ஆண்டு திருவாடானை நித்தியகல்யாணி பஞ்சாலை யில் தொழிலாளியாக பணி யைத் தொடங்கிய அவர், அதே ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

திருவாடானை பகுதி யில் தனது நண்பர்களுடன் இணைந்து கட்சியின் முதல் கிளையை உருவாக்கியவர் என்றும், உடல்நலக்குறைவு இருந்த போதிலும் கட்சி யின் அனைத்து போராட்டங் களிலும் முன்நின்று செயல் பட்ட போராளி என்றும் கட்சி யினர் நினைவுகூர்ந்தனர். ஒ

ன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பின்னரும் மக்களோடு நெருக்கமாக இருந்து பொதுச்சேவையில் ஈடுபட்டவர் என பேசப்பட் டது.

அவரது நினைவாக நடை பெற்ற புகழஞ்சலி கூட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரு வாடானை தாலுகாச் செய லாளர் கே.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்டச் செயலா ளர் ரெ.குருவேல், மூத்த தோழர் ஏ.ஆர்.கே.மாணிக் கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கலையர சன், விவசாய சங்க மாநில துணைத் தலைவர் முத்து ராமு உள்ளிட்டோர் புக ழஞ்சலி உரையாற்றினர்.

மேலும், மூத்த தோழர் கள் கே.ரத்தினம், என்.வி. கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி. பூபாலன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர்.சேது ராமன், வி.அருள்சாமி, தோழர் நாகநாதனின் மகள் கள் புனிதா, வெண்மணி ஜோதி, மகன் ஜோதிபாசு, மருமகள் சத்யா, வழக்கறி ஞர் யூனிட் செயலாளர் தன பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.