முந்தய பக்கம்

தோழர் என். வரதராஜன் நினைவு தினம் பழனியில் என். பாண்டி - தலைவர்கள் மலரஞ்சலி

11 Apr 2026, 5:30 am
தோழர் என். வரதராஜன் நினைவு தினம் பழனியில் என். பாண்டி - தலைவர்கள் மலரஞ்சலி

தோழர் என். வரதராஜன் நினைவு தினம் பழனியில் என். பாண்டி - தலைவர்கள் மலரஞ்சலி

பழனி, ஏப். 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் மாநில முன்னாள் செயலாளருமான தோழர் என். வரதராஜனின் 14-ஆவது ஆண்டு நினைவு தினம், வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதொரு பகுதியாக, பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் என். வரதராஜன் படத்திற்கு, மாநில செயற்குழு உறுப்பினரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பழனி சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளருமான என். பாண்டி, மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.

வேடசந்தூர், திண்டுக்கல் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தோழர் என். வரதராஜன் மேற்கொண்ட மக்கள் பணிகளை நினைவு கூர்ந்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜீவானி, மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாநகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram