தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளுக்காக போராடிய தோழர் என்.செல்லதுரை மறைவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

5 May 2026, 10:23 pm
விவசாயிகளுக்காக போராடிய தோழர் என்.செல்லதுரை மறைவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

விவசாயிகளுக்காக போராடிய தோழர் என்.செல்லதுரை மறைவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

சென்னை, மே 5- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.

செல்ல துரை மறைவுக்கு, அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்திலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் விவசாய சங்கத்தில் பல்வேறு பொறுப்பு களில் பணியாற்றி வந்த தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவ ரும், மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் என்.செல்லதுரை 04.05.2026 அன்று இயற்கை எய்தினார்.

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்ப லூர் மாவட்டத் தலைவராகவும் - மாநிலக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும், பெரம்பலூர் மாவட் டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளராகவும் சிறப்பாக பணி யாற்றியவர் தோழர் என்.செல்லத்துரை.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் அனைத்து வாழ்வாதார பிரச்சனைகளிலும் தலையிட்டு எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று வெற்றி கண்டவர்.

வறட்சி யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதிலும், மக்காச் சோளப் பயிர் அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட போதும், சமீபத்தில் மக்காச் சோளம் விலை வீழ்ச்சி ஏற்பட்ட போதும், மாவட்டத்தில் வெங்காய விலை வீழ்ச்சி மற்றும் நீர்பாசன திட்டங்களுக்கு குளங்கள், ஏரிகளை பலப்படுத்திடவும் பல்லாயிரக்கணக் கான விவசாயிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியவர்.

தன் வாழ்நா ளில் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை நடத்தியதற்காக 3 ஆண்டு காலம் சிறை வாசம் அனுபவித்தவர்.

குறிப்பாக பால் உற் பத்தியாளர்கள் நலனுக்காக பெரம்பலூர் மாவட்டத்திலும் இதர பகுதிகளிலும் போராட்டங்களை மேற்கொண்டவர்.

மறைந்த தோழர் என்.

செல்லத்துரை அவர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன், அவரைப் பிரிந்து வாழ் கின்ற குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள் கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.