தோழர் என்.முத்து-வின் 17 ஆம் நினைவு தினம் அனுசரிப்பு
16 May 2026, 1:08 am

தோழர் என்.முத்து-வின் 17 ஆம் நினைவு தினம் அனுசரிப்பு

தருமபுரி, மே 15- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் னணி தலைவர் தோழர் என்.

முத்து அவர் களின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் முன்னணி தலை வர் தோழர் என்.முத்து. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய இம் மாவட்டத்தில் விவசாயிகள் இயக் கத்தை கட்டியதில் இவரது பங்கு மகத் தானது.

ஜாமீன்தார்கள், குத்தகை விவ சாயிகளை நில வெளியேற்றம் செய் வதை தடுத்து நிறுத்தி, உழுபவர்க ளுக்கே நிலத்தை சொந்தமாக்கிட தொடர்ந்து போராடினார்.

கிராமப்புற ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, கந்து வட்டி கொடுமைகளை எதிர்த்து, காவல் துறை, வனத்துறை அதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக, தீண்டா மைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டிட, உழைக்கும் மக்களைத் திரட்டி போர்க் குணமிக்க வர்க்கப் போராட்டத்தை வழி நடத்திய தீரமிக்க போராளி தோழர் என்.

முத்து. இவர் மத்திய கூட்டுறவு வங்கி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, நீர்த்தேக்கங்கள் போன்றவை அமைவதற்கு அரும்பாடுபட்டவர்.

இவ ரின் 17 ஆம் ஆண்டு நினைவுதினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி ஒன்றியம், செம்மாண்ட குப்பம் கிராமத்திலுள்ள அவரது நினை விடத்தில், தோழர் என்.

முத்து அறக்கட் டளை சார்பில் மாலை வைத்து மரி யாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், சோ. அருச்சுனன், வே.விஸ்வநாதன், ஒன்றி யச் செயலாளர் கே.கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என். மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன், என்.

கந்தசாமி, ரவி, அன்பு, ஏ.ஜெயா, ஜி.வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.