தோழர் என்.ஆறுமுகம் நினைவஞ்சலி
30 May 2026, 11:55 pm
<p><strong>தோழர் என்.ஆறுமுகம் நினைவஞ்சலி</strong></p><p>திருப்பூர், மே 30- திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு மறைந்த தோழர் என்.ஆறுமுகம் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தாலுகா செயலாளராகவும் செயல்பட்டவர் என்.ஆறுமுகம். இத்துடன் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் சிறப்பாக செயல்பட்டவர். அவரது 13 ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று, திருப்பூர் ரயில்வே குட்செட் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி தலைமையில், மாவட்டச் செயலாளர் பி.பாலன், பொருளாளர் கார்த்தி உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று, கட்சியின் தெற்கு மாநகரக்குழு சார்பில் அரிசி கடை வீதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு, மாநகரக்குழு உறுப்பினர் கே.பொம்முதுரை தலைமை வகித்தார். தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெயபால், சுமைப்பணி தொழிலாளர் சங்க செயலாளர் பி.பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சிஐடியு அமைப்பு தினத்தை முன்னிட்டு, தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக தோழர் என்.ஆறுமுகத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
