பொதுவுடைமை இயக்க சொத்து தோழர் முத்து
6 Jul 2026, 9:34 pm
<p><strong>பொதுவுடைமை இயக்க சொத்து தோழர் முத்து</strong></p><p>கோவை மாவட்டம் சிங்காநல்லூர் வட்டாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் ஜனசக்தி நாளிதழின் விற்பனையாளராகவும் திறம்பட செயல்பட்டவர் தோழர் முத்து. இவர் கோத்தாரி ஆலையின் செங்கொடி சங்கத்தில் தீவிர ஊழியராகவும் செயல்பட்டு வந்தார். தோழர் முத்துவின் சங்கப் பணிகளுக்கு ஈடு கொடுக்க முடியாத தொழிற்சங்க விரோத சக்திகளால் அவர் ஆலைக்குள்ளேயே 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் நாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழர் முத்து போன்றவர்களின் அளப்பரிய தியாகத்தில் தோய்ந்த செங்கொடி இயக்கத்தை உயர்த்திப் பிடித்து வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்வோம். </p>
