தமிழ்நாடு பெயரிடக் கோரியதால் தடியடிபட்டு ரத்தம் சிந்தியவர்!
22 May 2026, 9:34 pm
<p><strong>தமிழ்நாடு பெயரிடக் கோரியதால் தடியடிபட்டு ரத்தம் சிந்தியவர்!</strong></p><p>ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளராக வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளராகவும் சிறப்புறச் செயலாற்றியவர் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன். மெட்ராஸ் ஸ்டேட் எனும் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ் நாடு’ பெயரிடக்கோரி பேரணி நடத்தி தடியடிபட்டு ரத்தம் சிந்தியவர். நாட்டு விடுதலைக் காகவும் மக்கள் நல்வாழ்வுக்காகவும் பல ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர். துப்பாக்கிக் குண்டுகள் குறி பார்த்த போதும் இயக்கத்தையே சரிபார்த்தவர். நெசவாளர்களின் துயரங்கள் தொடர்பாக அவர் எழுதிய இயக்கக் குறிப்புகளே தமிழின் தவிர்க்க இயலாத தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ நாவலின் மூலவித்துக்களாயின. கம்யூனிஸக் கொள்கைக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்டு கம்பீர மனிதனாக உயர்ந்து நின்றவர் தோழர் எம்.ஆர்.வி. இந்தியாவில் சமத்துவ சமுதாயம் படைக்க அவரது வழியில் நடைபோடுவதே இன்றைய கம்யூ னிஸ்டுகளின் கடமை. மே 23- தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவு நாள்</p>
