தோழர் மயிலை நித்யானந்தம்: முற்போக்கு இலக்கிய வானின் ‘எழுத்துச் சிற்பி’!
26 May 2026, 12:53 am

தோழர் மயிலை நித்யானந்தம்: முற்போக்கு இலக்கிய வானின் ‘எழுத்துச் சிற்பி’!

சென்னை மயிலாப்பூரில் பிறந்து, எழுத்துக்களையே ஆயுதமாக ஏந்தி, உழைக்கும் மக்களின் விடியலுக்கா கவும் முற்போக்குச் சிந்தனைக ளுக்காகவும் தன் வாழ்நாள் முழு வதையும் அர்ப்பணித்த ஒரு மகத்தான ஆளுமை தோழர் மயிலை எம்.எஸ். நித்யானந்தம்.

பத்திரிகைத் துறை, இலக்கியம், அறிவியல், திரைக்கதை எனத் தொட்ட இடமெல்லாம் முத்திரை பதித்த அந்தப் பன்முகச் சிந்தனையாளரின் நூற்றாண்டுப் பயணத்தை நெகிழ்வோடு நினைவு கூர்கிறது தமிழ்உலகம்.

தொடக்கம் முதல் தடம் வரை 1925 பிப்ரவரி 16-ம் நாள் மயிலாப்பூ ரின் மாரிச் செட்டித் தெருவில் பிறந்த நித்யானந்தம், இளமையிலேயே பொதுவுடைமைச் சிந்தனைகளா லும், சமூக மாற்றத்தின் மீதான ஆர்வத் தாலும் உந்தப்பட்டார்.

1944-ல், தனது 19-வது வயதிலேயே ‘தினமணி’ ஆசிரியர் குழுவில் இணைந்து தனது பத்திரிகைப் பயணத்தைத் தொடங்கி யவர், அடுத்த நான்கு தசாப்தங்க ளுக்கும் மேலாகத் தமிழ் இதழியல் துறையின் தவிர்க்க முடியாத சக்தி யாகத் திகழ்ந்தார்.

முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி 1952-ம் ஆண்டு ஜூலை 23-ல் சென்னை முற்போக்கு எழுத்தாளர் கள் சங்கம் தொடங்கப்பட்டபோது, அதன் நிறுவன உறுப்பினராகவும் நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருந்து, தமிழகத்தில் முற்போக்கு இலக்கியப் பயிர் செழிக்க வித்திட்ட வர் நித்யானந்தம்.

இந்த குழுவில் மு.வரதராசனார், கு.சா.கிருஷ்ண மூர்த்தி,மயிலை சீனி வெங்கடா சாமி,இரா.வெங்கடாசலம், கு.ம. பாலசுப்பிரமணியம், கணமுத்தையா, இரா.கிருஷ்ணய்யா,அம்பல வாணன், தமிழ்ஒளி,குயிலன்,ஜி.சீனி வாசன்,மு.பரமசிவம் போன்ற ஆகச்சிறந்த தமிழ் ஆளுமைகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தோழர் நித்யானந்தம் வெறும் எழுத்தாளராக மட்டும் நில்லாமல், மயிலாப்பூரில் 'பாரதியார் இலக்கிய மன்றம்' என்ற அமைப்பை நிறுவி, சமூக மாற்றத்திற்கான இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். '

ஆண்மை', 'அழைப்பு', 'குவிந்த கரங்கள்' என 25-க்கும் மேற்பட்ட நாவல்கள் மூலம் எளிய மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், அறிவியல் தமிழின் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.

'நவீன உலகம்', 'அறிவியலின் ஆற்றல்' போன்ற 20-க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்கள் இவரின் அறிவுத் தேடலுக்குச் சான்று.

திரைக்கலையும் மக்கள் நாடகமும் நித்யானந்தம் அவர்களின் ‘நீதியாம் நீதி’, ‘கண்ணின் மணிகள்’ போன்ற சமூக நாடகங்கள் தமிழகம் எங்கும் 50-க்கும் மேற்பட்ட முறை மேடையேறிப் புரட்சி செய்தவை. 1

954-ல் ஜனசக்தி இதழில் தோழர் ஜீவா இவரை மனதாரப் பாராட்டியது ஒரு வரலாற்றுப் பதிவு.

பட்டுக்கோட்டையாரை அறிமுகம் செய்த பெருமை: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மேடை நாடகத்தில் நடிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், தோழர் ஜீவாவிடம் அவரைப் பரிந்துரைத்து, திரைத் துறையில் பட்டுக்கோட்டையார் தடம் பதிக்கக் காரணமாக இருந்தவர் தோழர் நித்யானந்தம் என்பது காலம் மறைக்க முடியாத உண்மை.

பத்திரிகைத் துறையின் ஆளுமை தினச்செய்தி, நவசக்தி, முரசொலி முதல் ‘இதயம் பேசுகிறது’ வரை பல இதழ்களில் உதவி ஆசிரியராகவும், இணை ஆசிரியராகவும் பணியாற் றிய இவரது உழைப்பைக் கௌரவிக் கும் விதமாக வித்வான் வே.

லட்சும ணன் அவர்கள் 'எழுத்துச் சிற்பி' என்ற பட்டத்தை அளித்தார்

பத்திரிகைத் துறையில் இவருக்கிருந்த அனுபவ மும், தெளிவும் பின்னாளில் பல இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி யாக அமைந்தது.

நூற்றாண்டு கடந்தும் நிலைக்கும் நினைவுகள் மயிலாப்பூரில் பாரதியார் பெயரில் இலக்கிய மன்றம் நடத்தி, இறுதி வரை எளிய வாழ்க்கை வாழ்ந்த இந்த மக்கள் தோழர், 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது எழுத்துப் பயணத்தை நிறைவு செய்தார்.

77 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தமிழ் இலக்கியத்திற்கும், பத்திரிகைத் துறைக்கும் விட்டுச் சென்ற சொத்துக் கள் விலைமதிப்பற்றவை. மயிலை எம்.எஸ். நித்யானந்தம் போன்ற முன்னோடிகள் இட்ட பாதை யில்தான் இன்றைய முற்போக்கு இலக்கிய உலகம் நடைபயணத்தைத் தொடர்கிறது.

உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாகவும், அறிவியலின் வழிகாட்டியாகவும் திகழ்ந்த அந்த மாமனிதருக்கு நம் நெஞ்சார்ந்த செவ்வணக்கத்தைச் செலுத்து வோம்!