தோழர் மருதை – செங்கொடி இயக்கத்தின் வேராக தாங்கி நின்ற மகத்தான தியாகி! மதுக்கூர் இராமலிங்கம் புகழஞ்சலி
3 Jan 2026, 2:20 pm
<p><strong>தோழர் மருதை – செங்கொடி இயக்கத்தின் வேராக தாங்கி நின்ற மகத்தான தியாகி! மதுக்கூர் இராமலிங்கம் புகழஞ்சலி</strong></p>
<p>மதுரை, ஜன. 3 - மதுரை மண்ணில் செங்கொடி இயக்கத்தின் வேராகத் தாங்கி நின்ற மகத்தான தியாகி தோழர் கே. மருதை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் கூறினார். தூக்குமேடை தியாகி பாலுவின் உற்றத் தோழரும், மகத்தான தியாகியுமான தோழர் கே. மருதை யின் 24-ஆவது ஆண்டு நினைவு தினம், சனிக்கிழமையன்று மதுரை தைக் காலிலுள்ள மத்திய 2-ஆம் பகுதிக் குழு அலுவலகத்தில், பகுதிக்குழு செய லாளர் பி. கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் புகழஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட சலவைத் தொழி லாளர் சமூகத்தில் பிறந்த தோழர் மருதை, துணிகளை மட்டுமல்ல; சமூகத்தின் அழுக்குகளையும் கழுவி எடுத்த போராளியாக வாழ்ந்தவர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அந்தக் கடும் தருணங்களை எதிர் கொண்டு, மரணத்தின் நிழலில் வாழ்ந்த அவரது வாழ்க்கை, கம்யூனிஸ்ட் இயக்கத் தியாக வரலாற்றின் உச்சம். தூக்குமேடை தியாகி பாலு உட்பட பல தோழர்களுடன் பொய் வழக்கில் சேர்க்கப்பட்ட தோழர் மருதைக்கு, முதலில் தூக்குத் தண்டனையும், மேல்முறையீட்டில் ஆயுள் தண்ட னையும் விதிக்கப்பட்டது. இதனால், சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்ட தோழர் மருதை 14 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையானார். விடுதலைக்குப் பின்னரும் அவர் ஒதுங்கவில்லை. தவ வாழ்க்கையாக மீண்டும் இயக்கப் பணியைத் தொடர்ந்தார். தோழர் மருதை, தான் போராடியது, சிறை வாசம் அனுபவித்தது மட்டு மல்லாது, தலைமறைவுக் காலத்தில், தோழர் சங்கரய்யா போன்ற பல தலை வர்களையும் தனது குடிசையில், அழுக்குத் துணி மூட்டைகளுக்குள் மறைத்துப் பாதுகாத்தவர். ஒருபோதும் தன்னைப் “பெரிய தியாகி” என சொல்லிக்கொள்ளாத மருதை, கட்சியின் எளிய ஊழியரா கவே வாழ்ந்தார். தீக்கதிர் பத்திரிகை விநியோகத்தில் ஈடுபட்டார். கிளைச் செயலாளராக, மாவட்டக் குழு உறுப்பினராக பல பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றினார். தோழர் மருதை போன்ற தலை வர்களின் தியாகமே இன்றும் செங்கொடி இயக்கத்தின் இரத்த நாளங்களில் ஓடுகிறது. அவர்களின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி, செங்கொடியை மேலும் உயர்த்திப் பிடிப்போம். இவ்வாறு மதுக்கூர் இராமலிங்கம் பேசினார். மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், ம.பாலசுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ஜீவா, டி. குமரவேல் எம்.சி., கே. ஜாகிர் உசேன், தோழர் கே. மருதையின் மகள் வெள்ளையம்மாள், பேத்தி டான்யா, பேரன்கள் ராமமூர்த்தி, ஜீவா, ரவி, சங்கரய்யா மற்றும் கொள்ளுப்பேரன் பிடல் காஸ்ட்ரோ ஆகிய குடும்பத்தினரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.</p>
