தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் மஞ்சுளா படத்திறப்பு நிகழ்ச்சி கட்சியின் முன்னணித் தலைவர்கள் புகழஞ்சலி!

22 May 2026, 1:24 am
தோழர் மஞ்சுளா படத்திறப்பு நிகழ்ச்சி  கட்சியின் முன்னணித் தலைவர்கள் புகழஞ்சலி!
<p><strong>தோழர் மஞ்சுளா படத்திறப்பு நிகழ்ச்சி கட்சியின் முன்னணித் தலைவர்கள் புகழஞ்சலி!</strong></p><p>​​​​​​​திருவள்ளூர், மே 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்டக் குழு உறுப்பின ரும், கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான இ.வேலனின் மனைவி தோழர் மஞ்சுளா மறைவை யொட்டி, அவரது படத்திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை (மே 20) தாராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. உடல்நலக் குறைவால் மே 6 அன்று கால மான தோழர் மஞ்சுளாவின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு, கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் எம்.திருப்பதி தலைமை தாங்கினார். சிபிஎம் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் மறைந்த மஞ்சுளாவின் உருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மூத்த தோழர்கள் கே.செல்வராஜ், பி.ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஏ.ஜி.சந்தானம், வட்டச் செய லாளர் என்.கங்காதரன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பத்மா மற்றும் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு மறைந்த தோழருக்குப் புகழஞ்சலி செலுத்தினர். மேலும், வேலனின் பிள்ளைகளான சுர்ஜித், சுபாஷிணி, சுனில் ஆகியோருடன் உறவி னர்களும், கட்சியின் முன்னணி ஊழி யர்களும் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.