தோழர் எம்.ராஜேந்திரன் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
5 Nov 2026, 12:50 am
<p><strong>தோழர் எம்.ராஜேந்திரன் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு</strong></p><p>தருமபுரி, நவ.4-மார்க்சிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளராக பணியாற்றிய தோழர் எம்.ராஜேந்திரன் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று அனுசரிக்கப்பட்டது.</p><p>உழைப்பாளி மக்கள், விவசாயிகள் உரிமையை பாதுகாக்க அயராது உழைத்த, நல்லம்பள்ளி ஒன்றியத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக, சிஐடியு வட்ட நிர்வாகியாக செயல்பட்டவர் தோழர் எம்.ராஜேந்திரன். இவரின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தடங்கம் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை வைத்து நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்விற்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுணன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, கே.எல்லப்பன், வழக்கறிஞர்கள் பி.மாதேஸ், பி.பிரசாத், மற்றும் முனியப்பன், வள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
