கானகம் தோழர் எம்.லோகநாதன் சேமித்த ரூ.25 ஆயிரத்தை கட்சி நிதியாக வழங்கிய குடும்பத்தினர் படம் திறப்பு நிகழ்வில் நெகிழ்ச்சி
18 Jul 2026, 12:05 am
<p><strong>கானகம் தோழர் எம்.லோகநாதன் சேமித்த ரூ.25 ஆயிரத்தை கட்சி நிதியாக வழங்கிய குடும்பத்தினர் படம் திறப்பு நிகழ்வில் நெகிழ்ச்சி</strong></p><p>சென்னை, ஜூலை 16 - கானகம் தோழர் எம்.லோகநாதன் சேமித்து வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாயை அவரது குடும்பத்தினர் கட்சி நிதியாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட முன்னோடியும், தரமணி கானகம் பகுதி மூத்த தலைவருமான தோழர் எம்.லோகநாதன் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் புதனன்று (ஜூலை 15) கானகத்தில் நடைபெற்றது. உருவப்படத்தை திறந்து வைத்து பேசிய கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், “1977ல் கட்சியில் இணைந்த தோழர் லோகநாதன் கடும் அடக்கு முறையை எதிர்கொண்ட தரமணி பகுதியில் கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்தார். வர்க்க வெகுஜன அமைப்புகளை உரு வாக்கினார். தனது மனைவி, 6 பிள்ளை களை மட்டுமல்ல பேரப் பிள்ளைகளையும் கட்சி உறுப்பினர்களாக மாற்றினார். தமிழகத்திலேயே தோழர் லோகநாதன் குடும்பத்தில்தான் 22 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். அவரது மனைவி ஜெயசுந்தரி மாதர் சங்கத்தின் முன்னணி தலைவராக இருந்தார். 9ஆம் வகுப்பு வரை படித்தி ருந்தாலும் மார்க்சியத்தை உள்வாங்கி, தனது பிள்ளைகள் அனைவருக்கும் சடங்கு மறுப்பு சீர்திருத்த திருமணம் செய்து வைத்தார். சென்னையில் தொழிலாளியாக இருந்தாலும் விவசாயிகளுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு வாரம் சிறையில் இருந்துள்ளார்” என்றார். தோழர் எம்.லோகநாதன் தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்திருந்த 25ஆயிரம் ரூபாயை கட்சி நிதியாக அவரது குடும்பத்தினர் வழங்க, அதை நெகிழ்ச்சி ததும்ப ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வுக்கு வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமை தாங்கினர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ம.விஜய குமார், என்.குமரன், தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு அன்பரசன், சிபிஎம் கிளைச் செயாளர் எஸ்.திவாகரன் உள்ளிட்டு மூத்த தலைவர்கள் பேசினர்.</p>
