தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் மா.கலிவரதன் படத்திறப்பு விழா காரப்பட்டில் திரளானோர் பங்கேற்பு

yesterday
தோழர் மா.கலிவரதன் படத்திறப்பு விழா  காரப்பட்டில் திரளானோர் பங்கேற்பு
<p><strong>தோழர் மா.கலிவரதன் படத்திறப்பு விழா காரப்பட்டில் திரளானோர் பங்கேற்பு</strong></p><p>விழுப்புரம், ஜூன் 22 - விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் வட்டம், காரப்பட்டு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் க. சிவக்குமாரின் தந்தை யும், விவசாயிகள் சங்கத்தின் களப் போராளியுமான தோழர் மா. கலி வரதன் உருவப் படத்திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தோழர் மா. கலிவரதனின் படத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி. எம். ஜெய்சங்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி. ஏழுமலை, ஜி. ஆனந்தன், விழுப்புரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். முத்துக்குமரன், ஜி. ராஜேந்திரன், ஆர். டி. முருகன், ஆர். மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் சு. விஸ்வநாதன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மா. சந்திரசேகரன், ஒன்றியப் பெருந்தலைவர் கு. ஓம்சிவசக்திவேல், திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஆ.ராஜீவ்காந்தி, மகளிர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் ப. வள்ளி, மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ. தேவநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு தோழர் மா. கலிவரதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.