தோழர் கு.லிங்கமுத்து காலமானார்
7 Feb 2026, 5:37 pm
<p><strong>தோழர் கு.லிங்கமுத்து காலமானார்</strong></p>
<p>வேலூர், பிப்.7 - வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கு.லிங்கமுத்து உடல்நலக்குறைவால் வெள்ளியன்று (பிப்.6) காலமானார். அவருக்கு வயது 72. அவரது உடலுக்கு சிபிஎம் பேர்ணாம்பட்டு-குடியாத்தம் தெற்கு தாலுகா செயலாளர் சி.சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமி நாதன், செ.ஏகலைவன், பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.குணசேகரன், குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன், நகர செயலாளர் வி.குபேந்திரன் மூத்த தோழர் சி.எம்.நடராஜன், நகர, தாலுகாகுழு உறுப்பினர்கள் எஸ்.கோட்டீஸ்வரன், ஜி.ரகுபதி, ஜ.கார்த்தி கேயன், சி.என்.ராம்குமார், எம்.ராஜா, ஆர்.கோவிந்தராஜ், கே.முரு கானந்தம், என்.லெனின், ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் மலர் மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர். தோழர் கு.லிங்கமுத்து 1976-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தவிச பொருளாளராகவும்ம ற்றும் செட்டிக்குப்பம் ஊராட்சியில் 2 முறை ஊராட்சி மன்ற தலைவராகவும், ஒருமுறை ஒன்றியக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். பின்னர் சிபிஐயில் இணைந்து 2011 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p>
