தோழர் கே.ஆர்.சுந்தரம் நினைவுநாள்
6 May 2026, 1:40 am
<p><strong>தோழர் கே.ஆர்.சுந்தரம் நினைவுநாள்</strong></p><p>வேலூர், மே 5 - விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த முன்னோடியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.ஆர்.சுந்தரத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிஐடியு வேலூர் மாவட்டக்குழு அலுவ லகத்தில் மாவட்ட துணைத்தலைவர் வி.நாகேந்திரன் தலைமையில் தோழர் கே.ஆர்.சுந்தரம் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், நிர்வாகிகள் மு.காசி, பழனியப்பன் தவிச மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன், விதொச மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன் தமுஎகச சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். காட்பாடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் வட்டக்குழு செயலாளர் ஆர்.சுடரொளியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கணேஷ், கு.தருமன், சங்கர், லோ.நவீன், கிளை செயலாளர்கள் கோவிந்தம்மாள் ஜி.ஆர்.கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போன்று குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம், கே.ஆர்.சுந்தரம் நினைவு தினங்களை யொட்டி இருவரது புகைப்படங்கள் வைத்து நகர செயலாளர் வி.குபேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன் மற்றும் நகரகுழு உறுப்பினர்கள் உடனி ருந்தனர்.</p>
