தோழர் கே.ஜி.கணேசன் முதலாமாண்டு நினைவு அஞ்சலி
8 Jul 2026, 10:49 pm
<p><strong>தோழர் கே.ஜி.கணேசன் முதலாமாண்டு நினைவு அஞ்சலி</strong></p><p>சென்னை, ஜூலை 8- மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே.பேட்டை வட்டச் செயலாளர் மற்றும் சிஐடியு நிர்வாகி தோழர் கே.ஜி.கணேசனின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மையார்குப்பத்தில் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 6) நடைபெற்றது. அம்மையார்குப்பம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஆர்.கே.பேட்டை வட்டச் செயலாளர் ஏ.சிவபிரசாத் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மூத்த தோழர்கள் ப.சுந்தரராசன், கே.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ்அரசு, சி.பெருமாள், ஏ.ஜி.சந்தானம், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.அப்சல்அகமது மற்றும் திருத்தணி வட்டச் செயலாளர் வி.அந்தோணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தோழர் கே.ஜி.கணேசனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். பொதுமக்களுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் கே.ஜி.கணேசன் ஆற்றிய பணிகள் குறித்து நினைவுகூர்ந்தனர்.</p>
