தோழர் கருணாமூர்த்தி முதலாம் ஆண்டு நினைவேந்தல்
11 Jul 2026, 8:43 pm
<p><strong>தோழர் கருணாமூர்த்தி முதலாம் ஆண்டு நினைவேந்தல்</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 11- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் தோழர் கரு ணாமூர்த்தி அவர்களின் நினை வேந்தல் பொதுக்கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினராகம், சிஐடியு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்டச் செயலாளராகவும், மாநி ல தலைவராகவும் என பல்வேறு பொறுப்புக்களில் கருணாமூர்த்தி வகித்துள்ளார். 2025 ஜூலை 5 அன்று அவர் கால மானார். அவரது முதலாம் ஆண்டு நினைவேந்தலையொட்டி வெள்ளி யன்று பொதுக்கூட்டம் கடல் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.பி.செந்தில் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.குருவேல், சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் எம்.சிவாஜி, சிபிஎம் இராமேஸ்வரம் தாலுகா செயலாளர் ஜி.சிவா, சிபிஐ தாலுகா செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், தவெக நிர்வாகி கண்.இளங்கோ, மதிமுக நகரச் செயலாளர் வெள் ளைச்சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஆரோக்கிய நிர் மலா, தாலுகா செயலாளர் சுமதி, சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் டி.ராமச்சந்திரபாபு, கடல் தொழி லாளர் சங்க மத்திய கமிட்டி உறுப்பி னர் மகேஸ்வரி உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தினர். சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.வாசுதேவன், சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் முருகன், சின்னத் துரை, மீனவ சங்கத் தலைவர்கள் நம்புராஜன், முனியசாமி, கருணா மூர்த்தி அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
