தோழர் கலாவதி சிங்காரவேலு மறைவு: சிஐடியு இரங்கல்
3 Feb 2026, 4:00 pm
<p><strong>தோழர் கலாவதி சிங்காரவேலு மறைவு: சிஐடியு இரங்கல்</strong></p>
<p>சேலம், பிப்.3 - இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாநிலத் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.சிங்காரவேலுவின் இணை யர் எஸ்.கலாவதி திங்களன்று காலமா னார். அவருக்கு வயது 73. மறைந்த தோழர் எஸ்.கலாவதி உடல் ஜங்ஷன் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள மேக்னசைட் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன், மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன், மாநிலப் பொருளாளர் எஸ். ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் சி. நாகராஜ், டி. உதயகுமார், சிஐடியு சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், பொருளாளர் வீ.இளங்கோ, சாலை போக்குவரத்து சங்கம் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக் கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எ. குமார், மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி சேலம் செவ்வாய் பேட்டை மயானத்தில் நடைபெற்றது. சிஐடியு மாநிலக் குழு இரங்கல் இதுதொடர்பாக சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தி வருமாறு: சிஐடியு மாநில தொழிற்சங்க மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.சிங்கார வேலு, சேலம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொழிற்சங்க இயக்கத்திலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டதற்கு உறுதுணையாக இருந்தவர் கலாவதி. தோழர் ஆர்.சிங்காரவேலு சிஐடியு மாநில பணிகளுக்காக சென்னைக்கு குடி பெயர்ந்து வந்த போது, கலாவதியும் அவருடன் சென்னையில் தங்கி, தொழிற் சங்கப் பணிகளுக்கு பேருதவி செய்த வர். பல ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோ யால் பாதிக்கப்பட்ட போது, சிஐடியுவின் முயற்சியால் மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர், சற்று உடல் நலம் தேறி நலமுடன் இருந்தார். சமீபத்தில் அவரது உடல்நிலை கடு மையாக பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் ஆர்.சிங்காரவேலு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சிஐடியு மாநிலக் குழு சார்பில் ஆழந்த அனுதா பங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.</p>
