முந்தய பக்கம்

தோழர் கே.ஆர். ஞானசம்பந்தம் நினைவு தின சிறப்பு பேரவை

20 Feb 2026, 2:39 pm
தோழர் கே.ஆர். ஞானசம்பந்தம்  நினைவு தின சிறப்பு பேரவை
<p><strong>தோழர் கே.ஆர். ஞானசம்பந்தம் &nbsp;நினைவு தின சிறப்பு பேரவை</strong></p> <p>மயிலாடுதுறை, பிப்.20- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகமான தோழர். கோ. பாரதிமோகன் நினைவகத்தில் சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. &nbsp;மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளருமான கே.ஆர். ஞானசம்பந்தம் நினைவு தினத்தையொட்டி நடந்த இப்பேரவைக்கு, மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், ப. மாரியப்பன், டி. சிம்சன், சி. விஜயகாந்த், ஜி. வெண்ணிலா, ஏ. அமுல் காஸ்ட்ரோ, டி.ஜி. ரவிச்சந்திரன், மயிலாடுதுறை நகரப் பொறுப்பு செயலாளர் ஏ.ஆர். விஜய், மூத்த தோழர்கள் டி.கணேசன், ஆர்.ராமானுஜம், வ. பழனிவேலு ஆகியோர் உரையாற்றினர். &nbsp;ஒன்றியச் செயலாளர்கள், கட்சியின் முன்னணி ஊழியர்கள் ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram