தொண்டால் பொழுதளந்த தோழர் கே.வரதராசன்
15 May 2026, 10:23 pm
<p><strong>தொண்டால் பொழுதளந்த தோழர் கே.வரதராசன்</strong></p><p>எளிமையும் திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு பேராளுமை தோழர் கே.வரதராசன். அரசுப் பணியை விட மக்கள் பணியே முதன்மையானது எனத் துணிந்து முடிவெடுத்தவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என உயர்ந்த பொறுப்புகளை வகித்தபோதும், சாமானிய விவசாயி களின் தோழனாகவே இறுதிவரை களத்தில் நின்றார். தமிழகம் முதல் ராஜஸ்தான் வரை எங்கு விவசாயிகள் உரிமைக்காகப் போராடினாலும், அங்கே ஆஜராகிவிடுவார். ஒடுக்கப்பட்டோர் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் துயரம் கண்டு கொந்தளித்த அவரது பேச்சும் எழுத்தும் அவர்களின் வாழ்வியலை அப்பட்டமாக உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. கொள்கை பிடிப்பும், சமரசமற்ற போராட்ட குணமும் கொண்ட தோழர் கே.வி. எண்ணற்ற தலைவர்களை உருவாக்கிய வழிகாட்டி. கொரோனா பெருந்தொற்று காலத்தில் 2020 மே 16 அன்று அவர் மறைந்தாலும், விவசாயிகளின் உரிமைக்காக அவர் சிந்திய வியர்வையும், அர்ப்பணிப்பும் காலத்தை வென்று என்றென்றும் நிலைத்திருக்கும்.</p>
