தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் கே.ரமணி 20 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

30 May 2026, 11:52 pm
தோழர் கே.ரமணி 20 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

தோழர் கே.ரமணி 20 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

கோவை, மே 30- தோழர் கே.ரமணி 20 ஆவது ஆண்டு நினைவு தினம் சனியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப் பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் மூத்த தலைவர்களில் ஒருவ ரான தோழர் கே.ரமணி அவர்க ளின் 20 ஆவது நினைவு தினம் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோபால் துவக்க வுரையாற்றினார். தொடர்ந்து கட்சி யின் மைய கிளை செயலாளர் ஜெய பால், பீளமேடு நகரக் குழு உறுப்பி னர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கே.ரமணியின் அரசியல் பங்களிப்பு கள் மற்றும் உழைக்கும் மக்களுக் காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி உரை யாற்றினர். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்று, தோழர் கே.ரமணி யின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதே போன்று கோயம்புத்தூர் மாவட்ட தங்க நகை தொழிலாளர் யூனியன் சார்பாக தியாகி குமரன் வீதியில் தோழர் கே.ரமணி அவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத் தப்பட்டது. இதில், சங்க பொதுச் செயலாளர் சந்திரன், பொருளாளர் மருதன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். ஈரோடு இதேபோன்று தோழர் கே.ரமணியின் 20 ஆம் ஆண்டு நினைவுதினம் சிஐடியு ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் இ.முத்துகுமார், மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், செயலா ளர் கே.மாரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற் றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.