தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏழ்மையிலும் கொள்கை குன்றாதவர் தோழர் ஜீவா

23 Jan 2026, 5:49 pm
ஏழ்மையிலும் கொள்கை குன்றாதவர் தோழர் ஜீவா
<p><strong>ஏழ்மையிலும் கொள்கை குன்றாதவர் தோழர் ஜீவா</strong></p> <p>பொள்ளாச்சி, ஜன.23- &nbsp;கவிஞரும், பேராசிரியருமான சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 90 &nbsp;ஆவது அகவை நிறைவு விழாவில், &lsquo;மக்கள் தலைவர்&rsquo; தோழர் ஜீவா வின் வாழ்வியல் குறித்து கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் நெகிழ்ச்சி உரையாற்றினார். கவிஞர் சிற்பி-யின் 90 ஆவது பிறந்தநாள் நிறைவு விழா பொள் ளாச்சியிலுள்ள கே.கே.ஜி திருமண மண்டபத்தில் வெள்ளியன்று துவங் கியது. கடந்த ஓராண்டாக நடை பெற்று வந்த இந்த கொண்டாட் டத்தின் நிறைவுப் பகுதியாக இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட் டுள்ளது. விழாவின் முதல் நாள் நிகழ்வாக &lsquo;கவிதையைக் கொண் டாடுவோம்&rsquo; எனும் தலைப்பில் கவி யரங்கம் நடைபெற்றது. கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையில் நடைபெற்ற இக்கவியரங்கத்தை, கவிஞர் மரபின் மைந்தன் முத் தையா தொடங்கி வைத்தார். இதில் கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, தஞ்சை &nbsp;இனியன் மற்றும் சக்தி ஜோதி &nbsp;ஆகியோர் தங்களது கவிதைகளை வாசித்தனர். இதைத்தொடர்ந்து கவிஞர் சிற்பி குறித்த &lsquo;கிராமத்து நதி&rsquo;, &lsquo;நதியின் பயணத்தில்&rsquo; ஆகிய ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டன. இரண்டாம் அமர்வாக &lsquo;தமிழ் காத்த தலைவர்கள்&rsquo; எனும் தலைப் பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கலை இலக்கியப் பெருமன்றச் செயலாளர் த.அரம் தலைமை தாங் கினார். மாசாணி அம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் &nbsp;தலைவர் எஸ். முரளி கிருஷ்ணன் &nbsp;முன்னிலை வகித்தார். இதில் &nbsp;அறிஞர் அண்ணா குறித்து வழக்கறி ஞர் சே.ம.மதிவதினியும், காமராசர் குறித்து குரு ஞானாம்பிகையும் உரையாற்றினர். மக்கள் தலைவர் ஜீவா: ஒரு சகாப்தம் நிகழ்வின் சிகரமாக, &lsquo;மக்கள் &nbsp;தலைவர் ஜீவா&rsquo; குறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம் பேசுகையில், &ldquo;பொள் ளாச்சி மண்ணுக்கும் ஜீவாவுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. பகத் சிங்கின் &lsquo;நான் ஏன் நாத்திக னானேன்&rsquo; புத்தகத்தை மொழி பெயர்த்ததற்காக, இதே பொள் ளாச்சி வீதிகளில் கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு ஜீவா இழுத்து வரப்பட்டார். அந்தத் தியா கத்தை இளம் வயதில் கண்டு &nbsp;வியந்தவர் தோழர் பாலதண்டா யுதம். காமராஜரே வியந்த எளிமை &nbsp;ஜீவாவுக்குரியது. முதலமைச்ச ராக இருந்த காமராஜர் தன்னை அழைக்க வந்தபோது, &lsquo;என்னிடம் இருப்பது ஒரே ஒரு வேட்டி, சட்டை தான்; அது காய்ந்ததும் வருகி றேன்&rsquo; என்று சொன்ன மாமனிதர் அவர். மைக்கே இல்லாத காலத் தில், கடற்கரை கூட்டத்தின் கடைசி மனிதனுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகக் கத்திப் பேசியே தன் கேட்கும் திறனை இழந்தவர் ஜீவா. கட்சி நிதியாகப் பல்லாயிரம் ரூபாய் மூட்டையில் இருந்தபோ தும், ஒரு டீ குடிக்கத் தன்னிடம் காசில்லாமல் தோழரிடம் கேட்ட தூய்மை ஜீவாவுக்கே உரியது. பார தியை உலகம் போற்றும் மகாகவி யாக நிலைநிறுத்த அவர் ஊர் &nbsp;ஊராகச் சென்றார். 1948-ல் எட்டைய புரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவில், பாரதியை எதிர்த் தவர்கள் மேடையில் இருக்க, ஜீவா கீழே துண்டு விரித்து அமர்ந்திருந் தார். மக்களின் வற்புறுத்தலால் அவர் மேடை ஏறிப் பேசியபோது, &lsquo;ஜீவா பேசவில்லை, என் அப் பாவே வந்து பேசுகிறார்&rsquo; என பாரதி யின் மகளே நெகிழ்ந்து பாராட்டி னார்.&rdquo; மேலும், காந்தியிடம் சாதியக் கட்டுமானங்கள் குறித்து கேள்வி &nbsp;கேட்கும் துணிச்சல் கொண்டவராக வும், கம்பனை &lsquo;மக்கள் கவி&rsquo; எனப் போற்றியவராகவும் ஜீவா திகழ்ந் தார், என்றார். தொடர்ந்து, சனிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ள இரண் டாம் நாள் விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திரைக் கலைஞர் சிவகுமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று, புதிய நூல்களை வெளியிட உள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.