முந்தய பக்கம்

தோழர் குருசாமி நினைவுதினம்

8 Oct 2026, 2:57 am
தோழர் குருசாமி நினைவுதினம்
<p><strong>தோழர் குருசாமி நினைவுதினம்</strong></p><p>திருப்பூர், அக்.7-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர், சிஐடியு தையல் கலைஞர்கள்சங்க முன்னாள் மாவட்டத் தலைவர், ஆத்துப்பாளையம் குருசாமியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று அனுசரிக்கப்பட்டது. கட்சியின் ஆத்துப்பாளையம் கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கட்சியின்ஆத்துப்பாளையம் ஏ கிளைச் செயலாளர் அய்யாசாமி தலைமை ஏற்றார். குருசாமியின் பணிகளை நினைவு கூர்ந்து மண்டலக்குழு உறுப்பினர் ஏ.சந்தோஷ் உரையாற்றினார்.ஆத்துப்பாளையம் பி கிளைச் செயலாளர் பாலமுருகன், மாற்றுத்திறனாளி அரங்க செயலாளர் பாண்டியன், மாதர்அரங்கசெயலாளர் கீதாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram