தோழர் குரு.சந்திரசேகரன் படத்திறப்பு
31 Mar 2026, 4:50 pm
<p><strong>தோழர் குரு.சந்திரசேகரன் படத்திறப்பு</strong></p>
<p>திருவாரூர், மார்ச் 31- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான தோழர் குரு. சந்திரசேகரன் படத்திறப்பு- புகழஞ்சலி கூட்டம் திருவாரூர் முடுக்கு தெருவில் உள்ள அவரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீ. முனியன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் இரா. சுவாமிநாதன் வரவேற்றார். மாநிலத் தலைவர் ந. ஜெயச்சந்திரன் தோழர் குரு சந்திரசேகரன் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி உரையாற்றினார். தொடர்ந்து, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன், செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் துணைத்தலைவர் பி. கிருஷ்ணமூர்த்தி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கி. இளமாறன், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெ. சோமசுந்தரம், மாநிலச் செயலாளர் வெ. பிரகாஷ், மாவட்டச் செயலாளர் எஸ். செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் புகழஞ்சலி உரையாற்றினர். அமைப்பின் மாநில செயற்க்குழு உறுப்பினர் எஸ்.புஷ்பநாதன் உள்ளிட்ட அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மற்றும் தோழமை சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்தினர். குரு. சந்திரசேகரன் மகன் ச. அருண்பாபு நன்றியுரை கூறினார். மறைந்த தோழர் குரு. சந்தரசேகரன் கண் தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
