தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமரி மாவட்டக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆணிவேர்: தோழர் ஜி.எஸ். மணி - எஸ். நூர்முகம்மது

yesterday
குமரி மாவட்டக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆணிவேர்: தோழர் ஜி.எஸ். மணி - எஸ். நூர்முகம்மது

குமரி மாவட்டக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆணிவேர்: தோழர் ஜி.எஸ். மணி - எஸ். நூர்முகம்மது

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் செல்வாக்கு மிக்க மாவட்டங்களில் முதன்மையானது கன்னியாகுமரி. அதற்கான விதையைத் தூவியவர்களில் முதன்மை யானவர் தோழர் ஜி.எஸ். மணி என்றால் மிகையாகாது.

முதல் கிளை, முதல் செயலாளரதமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் கிளை 1936இல் தொடங்கியபோது, அதில் உறுப்பினர்களாக இருந்த தோழர்கள் ப.ஜீவானந்தமும் சி.பி.இளங்கோவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது; எனினும் ஜீவாவின் பணி தமிழகம் முழுமைக்குமானது, மார்க்சிஸ்ட் கட்சி உதயமாகும் முன்பேஅவர் மறைந்தார். 1942இல் மார்த்தாண்டத்தில் தொடங்கிய குமரி மாவட்டத்தின் முதல் கிளையில் தோழர்கள் ஜி.எஸ். மணி, ஸ்டூவர்ட், கே.எம். ஸ்ரீதர், மார்த்தாண்டம் சோமன் நாயர், மார்த்தாண்டம் கோபி, முத்தையன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்; அதன் செயலாளராக தோழர் ஜி.எஸ். மணி தேர்வானார் — குமரி மாவட்டத்தின்முதல் கிளையின் செயலாளர் இவரே. பின்னர் டி. மணி உட்பட பலரும், தாமரைகுளத்தில் சோமசுந்தரம், கட்டையா,எல். வேலாயுதம் உள்ளிட்டோரும் இணைந்து கிளைகள் பெருகி, நாஞ்சில் நாடு குழு (செயலாளர் எல். வேலாயுதம்), விளவங்கோடு குழு (செயலாளர் ஜி.எஸ். மணி) என இரு குழுக்களாகப் பிரிந்தன.

பல தோழர்கள் மீது பிடி ஆணை இருந்ததால், மாவட்டக் குழு உருவாக்கும் கூட்டம் தக்கலை குமார கோயில் காட்டுப் பகுதியில் ரகசியமாக நடந்தது; தோழர் எம்.எம்.அலியின் தாயார் இரண்டு நாள் உணவைத் தயாரித்து அனுப்பினார். அக்கூட்டத்தில் ஜி.எஸ். மணி, கே. எம். ஸ்ரீதர்,எல். வேலாயுதம், எம்.எம்.அலி, செங்கோட்டை காமாட்சிமாவட்டக் குழு உறுப்பினர்களாக வும், ஜி.எஸ். மணி மாவட்டச் செயலாளராகவும் தேர்வானார் — இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டத்தின் முதல் மாவட்டச் செயலாளர் இவரே. திருவிதாங்கூர் மாநிலக் குழு உறுப்பினராகவும் இருந்த இவர், அரசியல் விஷயங்களில் தமிழ்நாடுமாநிலக் குழுவின் ஆலோசனைப்படி யும்ஸ்தாபன விஷயங்களில் திருவிதாங்கூர் குழுவின் ஆலோசனைப் படியும் மாவட்டக் குழுவை நடத்தினார். இம்மாவட்டக் குழுவின் பிரதிநிதிகள்கட்சியின் தமிழ்நாடு மாநிலமாநாடுகளில் பார்வையாளர் களாகவே அனுமதிக்கப்பட்டனர்.

தாய்த் தமிழகப் போராட்டமும் சிறை வாழ்வும்

குமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரிய ‘தாய்த் தமிழகம்’ போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களுடன் இணைந்தது.1951 ஆகஸ்ட் 11மார்த்தாண்டத்தில் நடந்த பேரெழுச்சிஊர்வலத்தை பட்டம் தாணுபிள்ளை அரசு காவல்துறை மூலம் அடக்கியது; துப்பாக்கிச் சூட்டில் பணிக்கர் எனும் ஒருவர் பலியானார், ஆனால் காவல்துறை ஜி.எஸ். மணி அல்லது அவர்தம்பி டி. மணி காலமானதாகத் தவறான அறிக்கை அனுப்பியது. அதே நாள் புதுக்கடையில் நடந்த சூட்டில் 11 பேர்கொல்லப்பட்டனர். 1956 நவம்பர் 1 மொழிவழி மாநிலமறுசீரமைப்பில் குமரி தமிழகத்து டன் இணைந்தது. கட்சி தடை செய்யப்பட்ட காலத்திலும் சீன யுத்த காலத்திலும் தடுப்புக் காவல்சட்டத்தின்கீழ் பல்லாண்டுகள் சிறைசென்ற தலைவர்களில் ஒருவர் ஜி.எஸ்.மணி. பட்டம் தாணுபிள்ளையின் காட்டாட்சியின்போது கைதாகி,குழித்துறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஆர்த்தெழுந்து ஓடிய குழித்துறை ஆற்றில் குதித்துத்தப்பிய சாகசம்இன்றும் வரலாற்றில் மறக்க முடியாதது. 1964இல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது, அன்றைய செயலாளர் எம்.எம். அலியுடன் இணைந்து மாவட்ட உறுப்பினர்கள் பெரும்பா லோரை மார்க்சிஸ்ட் கட்சியில் முழுமையாக இணைப்பதில் இவரது பங்களிப்புமகத்தானது.

சட்டமன்றப் பயணமும் மக்கள் தொண்டும்

திருவிதாங்கூர் காலத்திலும் பின்னரும் தொடர்ந்து தேர்தல் களம் கண்ட ஜி.எஸ். மணி, விவசாயி–தோட்டத் தொழிலாளர் போராட்டங்களில் தளகர்த்தராக விளங்கினார்; பனை ஏறும் தொழிலாளர் சங்கம், முந்திரி பருப்புத் தொழிலாளர் சங்கம் தொடங்கவும் வலுப்பெறவும் முக்கியபங்காற்றினார். 1977இல் விள வங்கோடு தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளராக மகத்தான வெற்றி பெற்றார் —குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் வெற்றியும், சிபிஐ(எம்) சார்பில் சட்டமன்றம் சென்ற முதல் உறுப்பினரும் இவரே. பனை ஏறும் தொழிலாளிக்காகமுதன்முறையாகச் சட்டமன்றத்தில் குரல் எழுப்பியதும், முந்திரி தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியத்திற்காக வாதிட்டதும், குமரியில் ரப்பர் தொழிற்சாலை தொடங்க வற்புறுத்தியதும் இவரது பணிகள். எளிமையான வாழ்க்கையும் மக்கள் எளிதில் அணுகும் அணுகுமுறையும், “கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மக்களில் ஒருவர்” என்ற உணர்வை வளர்த்தது.

திடீர் மறைவும் நிலைத்த நினைவும்

சட்டமன்றப் பணியையும் கட்சிப் பணியையும் ஒருங்கிணைத்து நடத்திய வேளையில், திடீரெனப் புற்றுநோய் கண்டறியப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி 1979 அக்டோபர் 5 அன்று காலமானார் — சட்டமன்றப் பணி இரண்டே ஆண்டில் முடிவுற்றது. மாநிலச் செயலாளர் தோழர் நல்லசிவனும் சட்டமன்றக் குழுத் தலைவர் தோழர் ஆர். உமாநாத்தும்உடன்வர, உடல் சென்னையி லிருந்து ஆம்புலன்சில் குமரிக்குக் கொண்டுவரப்பட்டது; வழிநெடுகி லும் பல்லாயிரம் தோழர்களும் தொழிலாளர்களும் மரியாதை செலுத்தினர். குழித்துறை கட்சி அலுவலகத்திலும் வி.எல்.சி. ஹாலிலும் பொதுமக்கள்பார்வைக்கு வைக்கப்பட்டு, மார்த்தாண்டத்தில் அடக்கம் செய்யப் பட்டது. கடந்த 47 ஆண்டுகளாக ஒவ்வோர் அக்டோபர் 5 அன்றும் குமரி மாவட்டக்கம்யூனிஸ்டுகளும் தொழிலாளர்களும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முதல் கிளைச் செயலாளர், முதல் மாவட்டச் செயலாளர், முதல் சட்டமன்ற உறுப்பினர், அதிக நாள்

சிறைவாசம் என ஏராளமான பெருமைகளுக்கு உரிய தோழர் ஜி.எஸ். மணியின் நினைவுகளைப் போற்றுவோம். அவர் வளர்த்த புரட்சிகர இயக்கத்தைமேலும் வலுவாகக் கட்டமைப்போம்; அவர் கனவு கண்ட சோசலிச சமூகம் படைக்க முழு மூச்சுடன் பாடுபடு வோம். பட்டம் தாணுபிள்ளையின் காட்டாட்சி முதல் பனை ஏறும்தொழிலாளியின் சட்டமன்றக் குரல் வரை, குமரி மாவட்டத்தின் தொழிலாளி வர்க்க வரலாற்றில் தோழர் ஜி.எஸ். மணி என்றும் அழியாத ஓர்அத்தியாயம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.