தோழர் கோ. வீரய்யன் 8-ஆம் ஆண்டு நினைவு தினம்: சித்தாடியில் சிபிஎம் செவ்வணக்கம் - புகழஞ்சலி!
6 hours before

தோழர் கோ. வீரய்யன் 8-ஆம் ஆண்டு நினைவு தினம்: சித்தாடியில் சிபிஎம் செவ்வணக்கம் - புகழஞ்சலி!

திருவாரூர், நவ. 18 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கோ. வீரய்யனின் 8-ஆம் ஆண்டு நினைவு தின செவ்வணக்க நிகழ்ச்சி, திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் சித்தாடியில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமைநடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. லெனின், நகரச் செயலாளர் டி.ஜி. சேகர் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் வி.பி. நாகை மாலி, ஐ.வி. நாகராஜன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எம். சின்னத்துரை, நாகை மாவட்டச் செயலாளர் வீ.மாரிமுத்து, தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர்.மாவட்டசெயற்குழு உறுப்பினர் கள் பி. கந்தசாமி, கே.என். முருகானந்தன், கே.ஜி. ரகுராமன், பா. கோமதி, டி. வீரபாண்டியன், கே.பி. ஜோதிபாசு மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், வர்க்க, வெகுஜன இயக்கங்களின் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, குடவாசல் கட்சி அலுவலகத்தில் உள்ள தோழர் ஜீ.வி. சிலைக்கும்மாலை அணிவித்து செவ்வ ணக்கம் செலுத்தப்பட்டது. சேகர் நன்றி கூறினார்.