தோழர் ஜி.மணி நினைவு நாளில் பொன்னேரியில் புகழஞ்சலி
5 Jun 2026, 11:37 pm
<p><strong>தோழர் ஜி.மணி நினைவு நாளில் பொன்னேரியில் புகழஞ்சலி</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 5- பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தை வளர்த்த முன்னோடித் தலைவர் தோழர் ஜி.மணி யின் நினைவு நாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் ஜி.மணியின் நினைவு நாளான வெள்ளியன்று (ஜூன் 5), பொன்னேரியில் உள்ள அவரது நினைவி டத்திற்குச் சென்ற கட்சி நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் விதிமுறைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அதனை விவசாய தொழிலாளர்களின் போராட்டங்களுக்கான ஆயுதமாகப் புத்தக வடிவில் கொண்டு சேர்த்தவர் ஜி.மணி என்றும், அவர் விட்டுச் சென்ற மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் கூட்டத்தில் தலைவர்கள் குறிப்பிட்டனர். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செய லாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், மூத்த தோழர் கே.செல்வராஜ், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அ.து.கோதண்டன், மாவட்ட தலைவர் இ.தவமணி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
