பணி நிறைவையொட்டி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய தோழர் சந்திரன்
8 Jun 2026, 11:19 pm
<p><strong>பணி நிறைவையொட்டி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய தோழர் சந்திரன்</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூன் 8- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் பி.சந்திரன் தனது பணி நிறைவை யொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி க்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி யுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலை வராகவும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப் பாளராகவும், சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவமல்லா மேற்பார்வையாளராகவும் திறம்படப் பணியாற்றியவர் பி.சந்திரன். அரசு ஊழியராகப் பணியில் சேர்ந்தது முதல் சங்கப் பணிகளிலும், பொது வெளியி லும் அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் நலனுக்காகவே தொடர்ந்து உழைத்து வந்த இவர், சுமார் 37.5 ஆண்டுகள் அரசுப் பணியை முடித்து கடந்த மே 31-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், தனது பணி நிறைவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி முன்னிலையில், கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சி.சுரேஷிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான (ரூ.1,00,000) நிதியை பி.சந்திரன் முறைப்படி வழங்கினார். இந்த நிகழ்வின் போது கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.பி.ஜெயராமன் உடனிருந்தார். பணி நிறைவு பெற்ற நிலையிலும் மக்கள் நலப் பணிக்காக நிதியுதவி வழங்கிய பி.சந்திரனுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.</p>
