முந்தய பக்கம்

தோழர்.சி.சுந்தரராஜன் நினைவு தினம்

2 Oct 2026, 1:24 am
தோழர்.சி.சுந்தரராஜன் நினைவு தினம்

தோழர்.சி.சுந்தரராஜன் நினைவு தினம்

சேலம், அக்.1-தோழர் சி.சுந்தரராஜன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மேற்கு மாநகர் சிவதாபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் மா.சின்னத்தம்பி அவர்களின் மகனும், கட்சியின் சேலம் மேற்கு மாநகர கமிட்டி முன்னாள் உறுப்பினருமான தோழர். சி.சுந்தரராஜன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் கொடியேற்று நிகழ்ச்சி கிளை செயலாளர் சி.லெனின் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி செங்கொடி ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், மூத்த தோழர் பி.சந்திரன் ஆகியோர் நினைவஞ்சலி உரையாற்றினர். கட்சியின் மேற்கு மாநகரச் செயலாளர் பி.கணேசன் மற்றும் சி.சுந்தர்ராஜன் அவர்களின் குடும்பத்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram