தோழர் அசோக் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்
14 Jun 2026, 12:53 am

தோழர் அசோக் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

திருநெல்வேலி, ஜூன் 12- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொரு ளாளராக செயல்பட்ட அசோக் கடந்த 2019 ஆம் ஆண்டு சாதி ஆதிக்கச் சக்தி யினரால் தச்சநல்லூர் அருகே கரையிருப்பில் படு கொலை செய்யப்பட்டார் .

தோழர் அசோக்கின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜூன் 12 வெள்ளிக்கிழமையன்று அவரது சொந்த ஊரான கரையிருப்பில் இல்லத்தின் முன்பிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரணி புறப்பட்டது.

அவரது நினைவிடத்தில் மாலையணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.

அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, மாவட்ட செய லாளர் க.ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், எம்.சுடலை ராஜ், ஆர்.மதுபால், சிஐடியு மாவட்டச் செயலாளர் சரவணபெருமாள் ஆகி யோர் பேசினர்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறு ப்பினர் கே.மாரிசெல்வம், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சைலஸ் அருள்ராஜ், சமூக ஆர்வலர் முருகன் கண்ணா மற்றும் அசோக்கின் பெற்றோர்கள், தோழர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.