தோழர் ஏ.கே.பாலசுப்ரமணியம் நினைவு தின பொதுக்கூட்டம்
29 Sept 2026, 2:13 am
<p><strong>தோழர் ஏ.கே.பாலசுப்ரமணியம் நினைவு தின பொதுக்கூட்டம் </strong></p><p>ஈரோடு, செப். 28-தோழர் ஏகே.பாலசுப்ரமணியன் நினைவு தின பொதுக்கூட்டம் ஆப்பக்கூடலில் ஞாயிறன்று நடைபெற்றது.</p><p>பவானி அருகே ஆப்பக்கூடல் பகுதியில் வசித்த ஏ.கே.பாலசுப்ரமணியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பட்டியலினத்தவர் மற்றும்சிறுபான்மையினருக்கான பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். அன்னாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் பொது கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஏ.ஆர்.துரைசாமி தலைமை வகித்தார். மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் பி.பி.பழனிச்சாமி, கே.ஆர்.விஜயராகவன், தாலுகா செயலாளர்கள் ஆர்.முருகேசன், ஆர்.பிரகாஷ்உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக கடம்பூர் தோழர் ஏ.எம்.காதர் நினைவுகலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.</p>
