முந்தய பக்கம்

காலத்தை வென்றவர்கள் தொண்டால் பொழுதளந்த தலைவர்

19 Jul 2026, 9:50 pm
காலத்தை  வென்றவர்கள் தொண்டால் பொழுதளந்த தலைவர்

காலத்தை வென்றவர்கள் தொண்டால் பொழுதளந்த தலைவர்

ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டுக்குரிய இயல்பான குணங்களினால் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சரியான ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டி வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர் தோழர் ஏ.நல்லசிவன். சட்டமன்ற மேலவையிலும் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் அவர் பணியாற்றிய போது தமிழகத்தின் பிரச்சனைகளை ஆழ்ந்து கவனித்து அதை மன்றங்களில் எடுத்துரைத்தார்.

வாச்சாத்தி மலைவாழ் மக்கள் பிரச்சனையை நாட்டின் கவனத்திற்குக் கொண்டு வருவதிலும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவும் அவர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். தமிழில் தந்தி வசதியைக் கொண்டுவர அவர் எடுத்த சிறப்பான முயற்சிகளை அனைவரும் பாராட்டினர். கட்சியின் மாநிலச்செயலாளராக, அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டவர். கட்சியிலும், தொழிற்சங்கத்திலும் எத்தனையோ பொறுப்புக்களை வகித்து வந்த போதிலும் மிகுந்த எளிமையான ஒரு வாழ்க்கையை கடைசிவரை வாழ்ந்து வந்தார்.

அவருடைய தன்னடக்கம் அனைத்து கம்யூனிஸ்டுகளும், பொது நல ஊழியர்களும் பின்பற்றத்தக்கதாகும். 1940இல் கட்சியில் சேர்ந்த அவர் 1997ஆம் ஆண்டில் காலமாகும் வரை 57 ஆண்டுகள் உழைக்கும் மக்களுக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகள் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக என்றென்றும் விளங்கும்.

இன்று (ஜூலை 20) தோழர் ஏ.நல்லசிவன் நினைவு நாள்

Share
FacebookXWhatsAppTelegram