பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று கொடுத்தவர் தோழர் ஏ.கோதண்டம் நினைவேந்தல் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நடந்தது
2 Nov 2026, 11:21 pm

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று கொடுத்தவர் தோழர் ஏ.கோதண்டம் நினைவேந்தல் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நடந்தது

சென்னை, நவ.2-அகில இந்திய வழக்கறி ஞர் சங்கத்தின் முன்னோடி தோழர் ஏ.கோதண்டம் நினைவேந்தல் கூட்டம் திங்களன்று (நவ.2) கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், கீழ்சேவூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழக்கு நடத்தி நீதி பெற்று கொடுத்தவர் தோழர் ஏ.கோதண்டம். அவ ரது மறைவையொட்டி, கீழ்சே வூர் கிராமத்திலிருந்து கோயம்பேடு வளாகத்தில் வியாபாரம் செய்யும் நண்பர்

கள் இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்விற்கு என்.நீலமேகம், எஸ்.டி.ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), என்.சுப்பிரமணியன் (விழுப்பு ரம்), செயற்குழு உறுப்பி னர்கள் ழு.ராஜேந்திரன், ச.லெனின், திண்டிவனம் வட்ட செயலாளர் அ.கண்ணதாசன், விருகம் பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ.நட ராஜன், காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க தலை வர் எம்.தியாகராஜன், கீரை வியாபாரிகள் சங்கத் தலை வர் வி.கோவிந்தராஜ், புதினா கொத்தமல்லி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.பி.பாலகிருஷ்ணன், சிறு குறு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் எஸ்.எஸ்.முத்துக்குமார், ஆர்.ரவி, தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் எஸ்.ஆர்.கோவிந்தன், காஜா பாய் உள்ளிட்டோர் பேசி னர்.