தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் “முரசு “ஆனந்த் காலமானார் தமுஎகச-சிபிஎம் அஞ்சலி

8 Jan 2026, 2:44 pm
தோழர் “முரசு “ஆனந்த் காலமானார்  தமுஎகச-சிபிஎம் அஞ்சலி
<p><strong>தோழர் &ldquo;முரசு &ldquo;ஆனந்த் காலமானார் &nbsp;தமுஎகச-சிபிஎம் அஞ்சலி</strong></p> <p>குழித்துறை, ஜன.8 - கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமுஎகச கலைஞர் தோழர் &nbsp;&ldquo;முரசு&rdquo; ஆனந்த் காலமானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும் முரசு கலைக்குழுமத்தின் இயக்குனரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மெதுகும்மல் வட்டாரக்குழு உறுப்பினருமான &nbsp;தோழர் முரசு ஆனந்த் &nbsp;(வயது 54) திருவனந்தபுரம் மருத்துவமனையில் காலமானார். தோழர் &nbsp;&ldquo;முரசு&rdquo; ஆனந்த் சிறந்த நாடக கலைஞர், மக்கள் பாடகர், &nbsp;நாட்டுப்புற கலைஞர், &nbsp; கவிஞர், &nbsp;பாடல் &nbsp;எழுத்தாளர், நாட்டுப்புறக்கலை மற்றும் நாடக பயிற்சியாளர், பேச்சாளர், சிறந்த &nbsp;இயக்க அமைப்பாளர் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர். &nbsp;தமிழகம் முழுவதும் தமுஎகச கலை இரவு மேடைகளில் முழங்கிய குரல் &nbsp;.கட்சியின் மாநாடுகளுக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் கலைப்பயணத்தை &nbsp;வழி நடத்துபவர் .தன் குடும்பத்தினரையும் சமூக செயல்பாட்டுக்கும் கலைக்கும் பணியாற்ற ஈடுபடுத்தியவர். &nbsp;குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா நடைக்காவு அருகில் ஆலங்கோடு இவரது சொந்த ஊர் ஆகும். &nbsp;தோழர் முரசு ஆனந்த்தின் மனைவி அருள் செல்வி,தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் ஆவார். &nbsp;மகன் மகரந்தன், மகள் மேதினி ஆகியோர் உள்ளனர். தமுஎகச பொதுச்செயலாளர் களப்பிரன் மாநிலப்பொருளாளர் சைதை ஜெ, &nbsp;துணைப்பொதுச் செயலாளர் வெண்புறா, &nbsp;துணைத்தலைவர் பிரளயன், &nbsp;மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயகாந்தன், &nbsp;மாவட்டத் தலைவர் ஹலீமா, &nbsp;செயலாளர் அருள் மனோ, &nbsp;மாநிலக்குழு உறுப்பினர் விடியல் குமரேசன், &nbsp;மாவட்ட பொருளாளர் மனோகர் ஜஸ்டஸ், &nbsp;மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி &nbsp;பாஸ்கரன், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், மூத்த தோழர் நூர்முகமது உட்பட பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். &nbsp;இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணிக்கு நடைபெறு கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.