தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குருபுரம் பழங்குடி இன மாணவர்களுக்கு கணினி மையம் மற்றும் விளையாட்டுத் திடல் திறப்பு

29 Mar 2026, 3:34 pm
குருபுரம் பழங்குடி இன மாணவர்களுக்கு கணினி மையம் மற்றும் விளையாட்டுத் திடல் திறப்பு
<p><strong>குருபுரம் பழங்குடி இன மாணவர்களுக்கு கணினி மையம் மற்றும் விளையாட்டுத் திடல் திறப்பு</strong></p> <p>திருவள்ளூர், மார்ச் 29- திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருபுரத்தில் வசிக்கும் பழங்குடி இன மாண வர்களின் உயர்கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கணினி மையம் மற்றும் விளையாட்டுத் திடல் சனிக் கிழமை (மார்ச் 28) திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர் போராட்டங்களால் 55 குடும்பங்களுக்குக் குடிமனைப் பட்டா மற்றும் 25 அரசு தொகுப்பு வீடுகள் கிடைத் தன. இடையில் ஏற்பட்ட தாமதத்தின்போது, &lsquo;எய்டு இந்தியா&rsquo; தொண்டு நிறுவனம் 22 &nbsp;வீடுகள், குடிநீர் தொட்டி, சோலார் விளக்கு மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக, &lsquo;எய்டு இந்தியா&rsquo; மற்றும் &lsquo;மோவிட்&rsquo; நிறுவனங்கள் இணைந்து 5 கணினிகள், ஸ்மார்ட் டிவி மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய கற்றல் மையத்தை அமைத்துள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, பூண்டி ஒன்றியத் தலைவர் அய்யனார், செயலாளர் கே. முருகன், எய்டு இந்தியா நிர்வாகிகள் கௌரி, சாமிநாதன், சுப்பிரமணி, ஸ்ரீ விசால் மற்றும் மோவிட் நிறுவனத்தின் சார்பில் செல்டன், சீனிவாசன், பொன்னுசாமி, கீர்த்திகா, அப்ரோஸ், சந்திர மோகன், ஜாபர் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.