கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
13 Dec 2025, 5:13 pm

ஜம்புகல் மலை ஆக்கிரமிப்பு தொடரும் போராட்டம்

உடுமலை, டிச.13- அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலையை தனி யார் ஆக்கிரமிப்பு செய்து, இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். மலையை அழிக்க பயன்படுத்தும் கனரக வாக னங்களை வருவாய் மற் றும் காவல்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்ய வேண் டும் என புதன்கிழமை முதல் 4 ஆம் நாளாக விவசாயிகள் மற்றும் விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின் றனர். இதுவரை போராட்டம் நடைபெறும் ஜம்புகல் மலை அடிவாரத்திற்கு அதிகாரி கள் வரவில்லை என்பது, மக்கள் பிரச்சனையை தீர்க்க அக்கறையில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மக்கள் நீதிமன்றத்தில் 4,407 வழக்குகளுக்கு ரூ.41 கோடி மதிப்பீட்டில் சமரசத்தீர்வு

திருப்பூர் , டிச.13- திருப்பூர் மாவட்டத்தில் சனியன்று திருப்பூர், அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், உடுமலைப் பேட்டை மற்றும் ஊத்துக்குளி நீதிமன்றங்களில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்பத் தகராறு வழக்குகள், நில எடுப்பு இழப்பீடு வழக்கு கள் மற்றும் சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள் ஆகி யவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பத்மா தலைமை வகித்தார். இதில் மாவட்ட நீதிபதி செல்லதுரை, அமர்வு நீதிபதி ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்த னர். திருப்பூர் நீதிமன்றங்களில் திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியின் குணசேகரன் மேற்பார்வையில் 8 அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 1,817 வழக்குகளில் ரூ.21 கோடியே 8 லட்சத்தி 2 ஆயிரத்து 624க்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதே போல் அவிநாசி நீதிமன் றங்களில் 3 அமர்வுகளில் 950 வழக்குகளில் ரூ.5 கோடியே 75 லட்சத்து 15 ஆயிரத்து 383, தாராபுரம் நீதிமன்றங்களில் 2 அமர்வுகளில் 227 வழக்குகளில் ரூ.65 லட்சத்து 76 ஆயிரத்து 310, காங்கேயம் நீதிமன்றத்தில் 3 அமர்வுகளில் ரூ.310 வழக்கு களில் 2 கோடி 41 லட்சத்து 23 ஆயிரத்து 679, மடத்துக்கு ளம் நீதிமன்றத்தில் 59 வழக்குகளில் 1 லட்சத்து 22 ஆயிரம், பல்லடம் நீதிமன்றத்தில் 3 அமர்வுகளில் ரூ.626 வழக்குகளில் 10 கோடியே 50 லட்சத்து 30 ஆயிரத்து 433, உடுமலை நீதிமன்றத் தில் 2 அமர்வுகளில் ரூ.337 வழக்குகளில் 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 237, ஊத்துக்குளி நீதிமன்றத்தில் 81 வழக்குகளில் ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்து 200 ரூபாய்க்கு சமரசத் தீர்வு காணப் பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் 23 அமர்வுகளில் 4,407 வழக்குகளில் ரூ.41 கோடியே 98 லட்சத்தி 60 ஆயிரத்து 866 ரூபாய்க்கு சமரசத் தீர்வு காணப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் உடுமலை அரசு மருத்துவமனை

உடுமலை, டிச.13- உடுமலை, வ.உ.சி வீதியில் சுமார் 2.50 ஏக்கர் பரப்பள வில் செயல்படும் அரசு மருத்துவமனையில் 14க்கும் மேற் பட்ட சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு ஆகியவை உள்ளன. இந்த மருத்துவ மனைக்கு தினமும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் வசிக்கும் மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகு தியான குழிப்பட்டி, தளிச்சி, மாவடப்பு, திருமூர்த்திமலை உள்ளிட்ட 18 செட்டில் மெண்ட் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இப்படி தினமும் ஆயி ரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த மருத்துவமனை யில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால், சிகிச் சைக்கு வரும் பொது மக்கள் மற்றும் நோயாளிகள் கடுமை யாக பாதிக்கப்படுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும், மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இந்த அரசு மருத்துவ மனையில் அனைத்து பிரிவுகளிலும் உரிய சிகிச்சை வழங்கு வதை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சோமனூத்து பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி டிச.28இல் சாலை மறியல்

திருப்பூர், டிச. 13 - சின்னக்கம்பாளையம் பேரூராட்சி சோமனூத்து பகுதியில் அடிப்படை வச திகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்ப டாமல் உள்ளதால், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியு றுத்தி டிசம்பர் 28 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்க ளைத் திரட்டி சாலை மறியல் போராட் டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட் டம் சின்னக்கம்பாளையம் பேரூராட்சி 3ஆவது வார்டு சோமனூத்து கிராம பகு தியில் நீண்ட காலமாக அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கி றது. குறிப்பாக இந்த வார்டு உறுப்பின ராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகுடீஸ்வரி செயல்பட்டு வருகிறார். இப்பகுதி பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து, பலமுறை பேரூராட்சி நிர் வாகத்தில் கோரிக்கை விடுத்தும் பல பணிகள் நிறைவேற்றப்படவில்லை. சோமனூத்து பகுதிக்கு பாதுகாக் கப்பட்ட அமராவதி ஆற்றுக் குடிநீர் மேல் நிலைத் தொட்டி மூலம் வழங்க வேண் டும், சோமனூத்து புது காலனிக்கு போக் குவரத்து வசதி ஏற்படுத்தித்தர வேண் டும், சோமனூத்து ஊரில் உள்ள அனைத்து சாலைகளுக்கும் கான்கிரீட் சாலை வசதி செய்து தர வேண்டும், சோமனூத்தில் விளையாட்டு மைதா னம் அமைத்து தர வேண்டும், மாரியம் மன் கோவில் அருகில் உள்ள பாலம் பழு தடைந்துள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே புதிய பாலம் கட்ட வேண்டும், சோமனூத்து புது காலனி, பழைய காலனி மக்களுக்கு ஈ பட்டா வழங்க வேண்டும், மண்டல புதூ ரில் உள்ள குடிநீர் தொட்டியை, பெரிய தாக புதிதாக கட்டித்தர வேண்டும், மேற்கு தெருவில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு உடுமலை ரோடு செல்லாம்பாளையம் பிரிவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சோமனூத்து கிளை முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி யின் கிளைச் செயலாளர் கே.மனோ கரன் மற்றும் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், தாராபுரம் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஆர்.வெங்கட்ராமன், மாவட்டக்குழு உறுப்பி னர் என்.கனகராஜ் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். எனவே சின்னக்கம்பா ளையம் பேரூராட்சி நிர்வாகம் உடன டியாக மக்கள் கோரிக்கைகளை நிறை வேற்றித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது.