தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திடுக

5 Jan 2026, 6:21 pm
பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திடுக
<p><strong>பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திடுக</strong></p> <p>ஈரோடு, ஜன. 5- அந்தியூர் பேருந்து நிலைய கட்டு மானப் பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண் டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேருந்து நிலைய வளாகத்தில் உணவ கங்கள், பேக்கரிகள், பழக்கடைகள், தேநீர் கடைகள், காலணி, பேன்சி, பூக் கடை மற்றும் ஜெராக்ஸ் என சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந் தன. இப்பகுதியைச் சுற்றியுள்ள நூற் றுக்கணக்கான வியாபாரிகளின் வாழ் வாதாரம் இந்தப் பேருந்து நிலை யத்தை மட்டுமே நம்பி அமைந்துள் ளது. இந்நிலையில், பேருந்து நிலையத் தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்குவதற்காக, பேருந்து நிலை யம் தற்காலிகமாக வாரச்சந்தை வளா கத்திற்கு மாற்றப்பட்டது. இந்தப் பணி கள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக் கப்பட்டிருந்தது. ஆனால், 4 மாதங்க ளைக் கடந்தும் தற்போது வரை 20 &nbsp;சதவீதப் பணிகள் கூட நிறைவடைய வில்லை. &nbsp;பேருந்து நிலையம் மாற்றப்பட்ட தால் போதிய வியாபாரம் இன்றி வியா பாரிகள் கடும் பொருளாதார நெருக்க டிக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட வாழ் வாதாரத்தை இழந்துள்ள நிலையில், &nbsp;தொழில் நிமித்தமாக வாங்கிய கடன்க ளுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், வியாபாரிகளின் நலனைக் கருத்தில் &nbsp;கொண்டு, மேற்கூரை அமைக்கும் பணி களை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து, பேருந்து நிலை யத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில், அந்தியூர் வியாபாரிகள் சங்கத் தலை வர் பி.கே.பாலசுப்ரமணியம் தலைமை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், ஏ.கே.செல்வராஜ் மற் றும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.