தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட

20 Nov 2025, 3:46 pm
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட

விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஈரோடு, நவ.20- அவிநாசி - அத்திக்கடவு திட்டத் தை முழுமையாக செயல்படுத்த வலி யுறுத்தி பெருந்துறை செயற்பொறி யாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித் தனர். 50 ஆண்டுகள் தொடர் போராட் டங்களுக்குப் பிறகு கிடைத்த இத் திட்டத்தை நிறைவேற்ற, 1998 ஆம்  ஆண்டில் ரூ.134 கோடி ஒதுக்கப் பட்டது. எனினும், திட்டம் நிறைவேற் றப்படவில்லை. பின்னர், 2000 ஆம்  ஆண்டில் மறு ஆய்வு செய்யப்பட்டு  ரூ.380 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டது. மீண்டும் மறு ஆய்வுக்குப் பின்,  2023 ஆம் ஆண்டில் ரூ.2,000 கோடி  செலவில் இத்திட்டம் செயல்பாட் டுக்கு வந்தது. இத்திட்டத்தின் மூலம் கோவை,  ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று  மாவட்டங்களில் உள்ள 13 ஒன்றி யங்களில் உள்ள 1045 குளம், குட்டை கள் நீர் நிரப்பப்படும். இத்திட்டத்தில் ஐந்து நீருந்து நிலையங்கள் (பம்பிங்  ஸ்டேஷன்கள்) உள்ளன. குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் புகார் திட்டத்தில் பெரிய குழாய்கள் இருக்கும் பகுதிகளில் பிரச்சனை இல்லை என்றும், சிறிய குழாய்கள் உள்ள இடங்களில் கல் அடைப்பு போன்ற காரணங்களால் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசா யிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டு கின்றனர். ஈரோடு மாவட்டத்தின் பெருந் துறை ஒன்றியத்தில், எல்லங்காட்டு குட்டை எண்: 11 முதல், புதுக்கிணறு தோட்டம் குட்டை, கருக்கங்காடு குட்டை, ஓலப்பாளையம் குட்டை, கினிப்பாளையம் குட்டை 62 ஆகிய ஆறு குட்டைகளுக்கு தண்ணீர் அற வே வரவில்லை எனக் கூறப்பட்டுள் ளது. இதேபோல், திருப்பூர் மற்றும்  ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பி யூர் வட்டம், உருமம்பாளையம் குட்டைக்கும் தண்ணீர் வரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதேபோன்று, சென்னிமலை சிறுகளஞ்சி, காளிபாளையம் குட்டை  மற்றும் குமலான் காடு குட்டை ஆகிய  இரண்டும் திட்டத்தில் சேர்க்கப்பட வில்லை. பாலத்தொழுவு குட்டைக் கும் தண்ணீர் விட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். இருப்பினும், பாலத்தொழுவு குட் டையில் சிப்காட் கழிவுகள் தேங்கி யுள்ள நிலையில், அங்கு நீர் விடு வது பிரச்சனையை உருவாக்கலாம்  என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள் ளது. திட்டத்தில் சேர்க்கப்பட்ட குட்டை களுக்குத் தடையின்றி தண்ணீர் வர  நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட் டது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால், அதற்குப் பதிலாக பெருந்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தாலுகா தலைவர் வி.எஸ்.மணியன்  தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஏ.எம்.முனுசாமி, தாலுகா செயலாளர் பி.முத்துபழனிசாமி, பொருளாளர் கே.குப்புசாமி, சிபிஎம்  தாலுகா செயலாளர் ஆர்.அர்ச்சுனன்,  சிஐடியு சார்பில் மயில்சாமி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி பேசுகையில், “இந்த பிரச் சனைக்கு விரைந்து தீர்வு காணப்பட வில்லை எனில், போராட்டம் நடத்து வதைத் தவிர்க்க முடியாது” என் றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.