முந்தய பக்கம்

தரகு தொகையை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

18 Mar 2026, 3:34 pm
தரகு தொகையை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
<p><strong>தரகு தொகையை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்</strong></p> <p>ஈரோடு, மார்ச் 18- தரகு தொகையை ஏமாற்றியவர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஈரோடு &nbsp;மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள் ளது. ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே பள்ளத் தூரை சேர்ந்தவர் சண்முகம். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் புதனன்று மாவட்ட காவல் அலுவல கத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், என்னிடம் &nbsp;மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜன் என்ப வர், காலியிடம் பற்றி விசாரித்தார். அவர் எதிர் பார்த்ததை போன்ற இடத்தினை காட்டினேன். அப் போது உரிமையாளருக்கான தரகர் மூலம் சண்முகத் திற்கு தெரியாமல் இரண்டு கிரயம் செய்து முடித் தார். இவ்வாறு ராஜன் மூன்றாவது கிரயத்தின் போது &nbsp;எதிர் தரப்பு தரகர் சண்முகத்திற்கு தகவல் அளித்தார். உடனே பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று நேரில் நியாயம் கேட்டபோது, ராஜன் தன்னை தகாத &nbsp;வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்தினார். எனவே, தன்னை ஏமாற்றிய ராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 கோடி ரூபாய் சொத்து பத்திரம் &nbsp;செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு சேர வேண் டிய ஒரு விழுக்காடு தரகுத்தொகையை பெற்றுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ் வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நசிய னூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் தங்கவேல் மற்றும் &nbsp;மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram