தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செய்தியாளரை  ஆபாசமாக பேசிய நடராஜர்  கோவில் தீட்சிதர் காவல் நிலையத்தில் புகார்

13 Nov 2025, 3:30 pm
செய்தியாளரை  ஆபாசமாக பேசிய நடராஜர்  கோவில் தீட்சிதர் காவல் நிலையத்தில் புகார்
<p><strong>செய்தியாளரை &nbsp;ஆபாசமாக பேசிய நடராஜர் &nbsp;கோவில் தீட்சிதர் காவல் நிலையத்தில் புகார்</strong></p> <p>சிதம்பரம், நவ.13- நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சிதம்பரம் செய்தியாளரை ஆபாசமாக பேசியதையடுத்து சிதம்பரம் காவல் நிலையத்தில் &nbsp;செய்தியாளர்கள் புகார் அளித்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் சிவகாமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் வியாழக்கிழமை காலை சிதம்பரம் நகரில் நடைபெற்றது. தேரோட்டத்தில் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை சிதம்பரம் தினகரன் புகைப்பட செய்தியாளர் பழனி புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அடையாளம் தெரிந்த இரு &nbsp; தீட்சிதர்கள் அவரை புகைப்படம் எடுக்கக் கூடாது என செய்தியாளர் என தெரிந்தும் ஆபாசமாக ஒருமையில் பேசியுள்ளனர். இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகளின் தலைமையில் செய்தியாளர்கள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நகரின் முக்கிய வீதிகளில் சாமி சிலைகள் ஊர்வலம் செல்லும் போது பொதுமக்கள் அவர்களின் செல்போன்களில் தூரத்தில் இருந்து படம் எடுத்தால் மரியாதை குறைவாக செல்போனை மூடு, அவனை பிடிடா என கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகம் செய்து வருவது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று பொதுமக்களையும், செய்தியாளர்களையும் அவமானப்படுத்தும் &nbsp;வகையில் செயல்படும் தீட்சிதர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.